Tamil Cinema News
தக் லைஃப் படத்தில் ஏமாந்த சிம்பு.. பின்னால் நடந்த சதி வேலை..!
நடிகர் சிம்பு மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியிருந்தார். பெரும்பாலும் கதை தேர்ந்தெடுப்பதில் சிம்பு இப்பொழுது அதிகம் கவனம் காட்டி வருகிறார்.
அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்களங்களை மட்டும் தான் அவர் தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் தக் லைஃப் திரைப்படம் சிம்புவிற்கு மிக முக்கியமான படமாக உள்ளது. ஏனெனில் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு இரண்டாவது முக்கிய ஹீரோவாக படத்தில் சிம்பு இருக்கிறார்.
ஆனாலும் கூட இந்த படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. ஆனால் இந்த படத்தின் கமலை விட சிம்புவுக்கு தான் முக்கியத்துவம் இருந்தது என்று ஆரம்பத்திலிருந்து பேச்சுக்கள் இருந்தன.
இது குறித்து வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது கமலஹாசனே இசை வெளியீட்டு விழாவில் பேசும்பொழுது ஆரம்பத்தில் இது என்னுடைய படமாக இருந்தது.
படம் முடியும்போது இது சிம்புவின் படமாக இருந்தது என்று கூறியிருந்தார். அப்படியானால் படத்தில் கமலை விடவும் சிம்புவிற்குதான் அதிகமான காட்சிகள் வைக்கப்பட்டு இருந்திருக்கின்றன. அதனால்தான் சிம்புவும் இந்த படத்தை அதிகமாக நம்பி இருந்திருக்கிறார்.
ஆனால் இறுதியில் படம் வெளியாகும் சமயத்தில் நிறைய காட்சிகளை நீக்கி இருக்கின்றனர். அதனால்தான் கமல்ஹாசனுக்கு காட்சிகள் அதிகமாக இருந்துள்ளது.
அந்த வகையில் சிம்பு ஏமாற்றப்பட்டுள்ளார் என்று தான் கூற வேண்டும் என்று கூறியிருக்கிறார் தக் லைஃப்.
