News
எந்த கலைஞனுக்கும் உள்ளதுதான்!.. மேடையில் தொகுப்பாளரை மூக்குடைத்த சிங்கம் புலி!..
தமிழில் உள்ள காமெடி நடிகர்களில் முக்கியமானவர் சிங்கம் புலி. மனங்கொத்தி பறவை திரைப்படத்தில் இவருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.
அதற்கு அதிகமான வரவேற்பும் கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து காமெடியனாக நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் இந்த திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே இயக்குனராக பணிபுரிந்து சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் சிங்கம் புலி.
அஜித் நடிப்பில் வெளியான ரெட், சூர்யா நடிப்பில் வெளியான மாயாவி போன்ற திரைப்படங்கள் எல்லாம் சிங்கம் புலி இயக்கத்தில் வந்த திரைப்படங்கள்தான் ஆனால் அவர் ஆரம்பத்தில் இயக்கிய திரைப்படங்களுக்கு வெகுவாக வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் திரைப்படங்களை எடுப்பதை விட்டு படங்களில் நடிக்க தொடங்கினார்.

இயக்குனராக தோல்வி:
சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிங்கம் புலி. இந்த கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதனை தொடர்ந்து மகாராஜா திரைப்படத்திற்கு வெற்றி விழா நடத்தப்பட்டது.
அந்த வெற்றி விழாவில் சிங்கம் புலியை அவமானப்படுத்திய தொகுப்பாளருக்கு சரியான பதிலடி கொடுத்திருந்தார் சிங்கம் புலி. பல பிரபலமான படங்களில் உதவி இயக்குனராகவும் இயக்குனராகவும் பணி புரிந்திருக்கிறார்.

மேலும் நடிகராகவும் பணிபுரிந்து இருக்கிறார் என்னும் பொழுது அதை ஒரு அடைமொழியாக வைத்து தான் அவரை அழைக்க வேண்டும் உதாரணத்திற்கு விஜய் சேதுபதியை மேடைக்கு அழைக்கும் பொழுது நடிகர் விஜய் சேதுபதி என்று கூறிதான் அழைப்பார்கள்.
அசிங்கப்படுத்திய தொகுப்பாளர்:
ஆனால் சிங்கம் புலியை அழைக்கும் போது அந்த தொகுப்பாளர் சிங்கம் புலி வந்து பேசுவார் என்று வெறுமனே கூறியிருந்தார். இது சிங்கம் புலிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. உடனே மேடையில் ஏறி அவர் மிகவும் கோபத்துடன் நான் இரண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன்.
நிறைய வெற்றி படங்களில் பணியாற்றியிருக்கிறேன் என்னை வெறும் சிங்கம் புலி என்று நீங்கள் அழைக்கிறீர்கள் என்று கோபமாக பேசியிருந்தார். மேலும் இதை நான் இப்படியே பதிவு செய்யாமல் விட்டுவிட்டால் பிறகு அடுத்த நிகழ்ச்சிகளில் எல்லாம் மேலும் சிங்கம் புலி என்றுதான் அழைப்பார்கள் அதற்காகத்தான் இதை கூறினேன் என்றும் கூறியிருக்கிறார்.
