Latest News
சித்தார்த்தால் நொந்துப்போன சிவகார்த்திகேயன்.. அந்த விஷயம் மட்டும் இல்லனா இந்தியன் 2 வில் எஸ்.கே இருந்திருப்பார்..
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். பெரும்பாலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களுக்கு குழந்தைகள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
அதனாலேயே தனது திரைப்படங்களில் கவர்ச்சிகளை குறைத்து வருகிறார் சிவக்கார்த்திகேயன். அவர் நடித்த டான், டாக்டர் மாதிரியான திரைப்படங்களில் தொடர்ந்து கவர்ச்சி காட்சிகளே அதிகம் இல்லாமல் இருப்பதை பார்க்க முடியும்.
இரட்டை ஹீரோ படங்கள்:
அதே சமயம் கேடி பில்லா, கில்லாடி ரங்கா திரைப்படத்திற்கு பிறகு இரண்டு கதாநாயகர்கள் கொண்ட திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் சிவகார்த்திகேயன். அப்படி நடிக்கும் போது தனக்கான அடையாளம் தனியாக மக்கள் மத்தியில் தெரியாது என்று அவர் நினைத்தார்.
மேலும் இது ஒரு ரஜினியின் பார்முலா ஆகும் ரஜினி எப்போதும் அவர் நடிக்கும் திரைப்படத்தில் அவர் மட்டும் தனியாக தெரிய வேண்டும் என்று நினைக்க கூடியவர். அதே விஷயத்தை சிவகார்த்திகேயனும் கடைபிடிக்கிறார்.
இருந்தாலும் அவருக்கு இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாக பேச்சுக்கள் இருந்து வந்தன. உண்மையிலேயே இந்தியன் 2 திரைப்படம் உருவாக்கப்பட இருந்தபோது சித்தார்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன்தான் நடிப்பதாக இருந்தது.
இந்தியன் 2 பேச்சுவார்த்தை:
இதற்காக சிவகார்த்திகேயனிடம் சென்று பேசியிருக்கின்றனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி படிக்கும் மாணவனாக வரும் காரணத்தினால் தாடி எல்லாம் நீக்கி விட்டு வந்து நடிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.
இந்தியன் 2 படத்திற்காக தேதி விஷயங்களில் கூட ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தி அவ்வப்போது வந்து நடித்துக் கொடுத்துவிடலாம். ஆனால் ஏற்கனவே நடிக்கும் திரைப்படத்தில் தாடி வைத்து நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதை எடுத்துவிட்டு எப்படி இந்தியன் நடிக்க முடியும் என்கிற காரணத்தினால் அந்த திரைப்படத்தை மறுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அதற்கு பிறகுதான் அந்த திரைப்படத்தில் சித்தார்த்தை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கின்றனர். சிவகார்த்திகேயனுக்கு இந்தியன் டுவில் நடிக்க அதிக ஆசை இருந்துமே கூட இந்த விஷயத்தை நடிக்க முடியாமல் போய் உள்ளது.