Connect with us

எனக்கு எல்லாம் செஞ்சுட்டு அவர் செத்து போயிட்டாரு… இயக்குனர் குறித்து கண் கலங்கிய சிங்கம் புலி!.

News

எனக்கு எல்லாம் செஞ்சுட்டு அவர் செத்து போயிட்டாரு… இயக்குனர் குறித்து கண் கலங்கிய சிங்கம் புலி!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வெற்றிகரமாக வளம் வந்து கொண்டிருப்பவர் சிங்கம் புலி. தமிழில் இயக்குனராக அறிமுகமான சிங்கம் புலி திரைப்படங்களை இயக்கினார். ஆனால் திரைப்படம் இயக்குவதில் அவருக்கு அவ்வளவாக வரவேற்பு என்பது கிடைக்கவில்லை.

தொடர்ந்து திரைப்படங்களில் காமெடி நடிகராக நடிக்க தொடங்கினார் அப்படி காமெடி நடிகராக நடிக்க தொடங்கிய திரைப்படங்களில் அவருக்கு வரவேற்பு கிடைக்க தொடங்கியது. அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்திருக்கிறார்.

சிங்கம்புலிக்கு வந்த வாய்ப்பு:

அதற்கு ஒரு ஆரம்பமாக இருந்தது மனங்கொத்தி பறவை திரைப்படம்தான் மனங்கொத்தி பறவை திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் அதிகமாக பிரபலமடைந்தது. தொடர்ந்து அந்த மாதிரியான கதாபாத்திரங்களிலேயே நடிக்க துவங்கினார் சிங்கம் புலி.

இந்த நிலையில் சமீபத்தில் மகாராஜா திரைப்படத்தில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிங்கம் புலிக்கு அதிகமான வரவேற்பு பெற்று கொடுத்த திரைப்படம் மாயாண்டி குடும்பத்தார். அந்த திரைப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபராக நடித்திருக்கும் சிங்கம் புலி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

மாயாண்டி குடும்பத்தார்:

இந்த நிலையில் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைத்ததை பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருந்தார் சிங்கம் புலி. மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தின் இயக்குனர் என்னுடைய நண்பர்.

அந்த திரைப்படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நான் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று கூறியதால் அந்த படத்தில் நடித்தேன். பிறகு எனக்கு வரவேற்பு என்பது அதிகமாக இருந்தது. அதற்கு முன்பு பல திரைப்படங்களில் இயக்குனராக இருந்திருக்கிறேன்.

நிறைய திரைப்படங்களில் வசனங்களில் பணிபுரிந்துள்ளேன். அப்பொழுது எல்லாம் எனக்கு கிடைக்காத புகழ் இந்த திரைப்படம் மூலமாக கிடைத்தது அப்படி புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்ற அந்த இயக்குனர் பிறகு இறந்து விட்டார் என்று மனம் நொந்து கூறி இருக்கிறார் சிங்கம் புலி.

To Top