Connect with us

லோகேஷ் கனகராஜ் நம்பர் வாங்கி தந்தா இண்டர்வீவ் தரேன் –  யூ ட்யூப் சேனலுக்கு அனுராதா போட்ட கண்டிஷன்!..

adnuradha sriram lokesh kanagaraj

News

லோகேஷ் கனகராஜ் நம்பர் வாங்கி தந்தா இண்டர்வீவ் தரேன் –  யூ ட்யூப் சேனலுக்கு அனுராதா போட்ட கண்டிஷன்!..

Social Media Bar

Director Lokesh Kanagaraj: தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

போகப்போக அவரது திரைப்படங்கள் முந்தைய படங்களை விட அதிக வசூலை கொடுப்பதால் தயாரிப்பாளர்களும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.

இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் பலருமே லோகேஷிடம் வாய்ப்பு கேட்டு வருகின்றனர். ஏனெனில் அவர் வரிசையாக பெரிய பிரபலங்களை வைத்து படம் எடுப்பதால் அதில் தனக்கு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் நினைக்கின்றனர்.

இந்த நிலையில் பிரபல பாடகியான அனுராதா ஸ்ரீராமும் கூட லோகேச்ஷை தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். தற்சமயம் லியோ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் வைத்த கரு கரு கருப்பாயி பாடலை பாடியவர் அனுராதா ஸ்ரீராம்தான்.

இவர் பொதுவாக youtube சேனலுக்கு பேட்டி கொடுக்க மாட்டார். ஆனால் இடையில் ஒரு பிரபல யூட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார் அது குறித்த அவர் கூறும் பொழுது இவ்வளவு பிசியான நேரத்திலும் ஏன் உங்கள் சேனலுக்கு பேட்டி கொடுத்தேன் என்றால் நீங்கள்தான் எனக்கு லோகேஷ் கனகராஜின் நம்பரை வாங்கி கொடுத்து உள்ளீர்கள் என்று கூறியுள்ளார் எனவே இவரும் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Top