எஸ்.பி.பி வரலைனா அந்த பாட்ட பாடவே வேணாம்! –  எஸ்.பி.பிக்காக ஒரு மாதம் காத்திருந்த இயக்குனர்! ஆனால் வந்த பாட்டோ..?

சினிமா துறையில் பிரபலமான பாடகர்களில் முக்கியமானவர் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம். அவர் தன் வாழ்வில் இந்திய மொழிகள் அனைத்திலும் பாடல்கள் பாடியுள்ளார். அவரது குரல்வளம் சிறப்பானது. எப்படி 1980 களில் இளையராஜா பாடலுக்கு ஒரு பெரும் வரவேற்பு இருந்ததோ அதே போல எஸ்.பி.பியின் குரலுக்கும் அதிகமான வரவேற்பு இருந்தது.

Social Media Bar

இளையராஜா இசையமைத்த பாடல்களில் அதிக பாடல்களுக்கு கண்டிப்பாக எஸ்.பி.பியே இசையமைத்திருப்பார். 1990 இல் கார்த்தி நடித்த கிழக்கு சீமையிலே என்கிற திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். இந்த படத்திற்கான இசையமைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு நடந்தது.

கிழக்கு வாசல் திரைப்படத்திற்கு இளையராஜாதான் இசையமைத்தார். படத்திற்கான அனைத்து இசையையும் இளையராஜா தயார் செய்துவிட்டார். இயக்குனருக்கும் பாடல் இசை பிடித்துவிட்டது. அடுத்து இசைக்கு ஏற்ப வரிகளை எழுதி பாட வேண்டும்.

படத்தின் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் படத்தின் சில பாடல்களை எஸ்.பி பாலசுப்ரமணியம் பாட வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அந்த சமயத்தில் எஸ்.பி.பி ஊரில் இல்லை. அவர் வேறு வேலையாக வெளிநாடு சென்றிருந்தார். வருவதற்கு ஒரு மாதம் ஆகும் என கூறிவிட்டனர்.

எனவே வேறு பாடகர்களை வைத்து பாடல்களை தயாரித்துவிடலாம் என்றார் இளையராஜா. ஆனால் ஆர்.வி உதயகுமார் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு மாதக்காலம் காத்திருந்து எஸ்.பி.பி வந்த பிறகு அந்த பாடல்கள் தயாராகின.

அப்படி வந்த பாடல்களில் பச்சமல பூவு, பாடி பறந்த கிளி ஆகிய இரண்டு பாடல்கள் பெரும் ஹிட் கொடுத்தன. இந்த ஹிட்டுக்காகதான் இயக்குனர் எஸ்.பி.பிக்காக காத்திருந்துள்ளார் என்பது பிறகுதான் அனைவருக்கும் தெரிந்துள்ளது.