Connect with us

தயாரிப்பாளருக்கே விபூதி அடித்த சிறுத்தை சிவா.. இது தெரியாமதான் வாயை விட்டீங்களா சார்..! வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

siruthai siva gnanavel raja

Tamil Cinema News

தயாரிப்பாளருக்கே விபூதி அடித்த சிறுத்தை சிவா.. இது தெரியாமதான் வாயை விட்டீங்களா சார்..! வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

Social Media Bar

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் நிறுவனரான தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் உருவான திரைப்படம் கங்குவா. சமீபத்தில் ஞானவேல் ராஜா தயாரித்த திரைப்படங்கள் எல்லாமே பெரிய பட்ஜெட் திரைப்படங்களாக இருந்தன.

அப்படியாக ஞானவேல் ராஜா இயக்கிய தங்கலான் திரைப்படம் அவருக்கு பெரிதாக வரவேற்பு பெற்று தரவில்லை. இந்த நிலையில் தற்சமயம் 350 கோடி செலவில் அவர் தயாரித்த திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்தைப் பொறுத்தவரை முதல் மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 100 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.

ஆனால் இது 300 கோடி ரூபாய் வசூல் செய்யுமா? என்பது சந்தேகம் தான் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் படம் வெளியாவதற்கு முன்பே நடிகர் சூர்யா மற்றும் ஞானவேல் ராஜா போன்றவர்கள் படம் குறித்து மிகவும் அதிகமாக பேசி வந்தனர்.

kanguva

kanguva

சிறுத்தை சிவா செய்த வேலை:

இந்நிலையில் படம் குறித்த ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது அதாவது உண்மையில் முழு படத்தையும் வெளியாவதற்கு முன்பு ஞானவேல் ராஜாவோ அல்லது சூர்யாவோ பார்க்கவே இல்லை என்று கூறப்படுகிறது.

இயக்குனர் சிறுத்தை சிவா ஒரு சில சிறப்பான காட்சிகளை மட்டும் தான் அவர்களுக்கு போட்டு காட்டி இருக்கிறார். அதனை பார்த்த உடனே அவர்கள் மொத்த படமும் நன்றாக இருப்பதாக நினைத்துவிட்டனர். அதனை வைத்து தான் அனைத்து விழாக்களிலும் இப்படி படத்தை மிகவும் உயர்த்தி பேசியிருக்கின்றனர் என்று சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதனால் தான் இப்பொழுது படம் வெளியான பிறகு அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. உண்மையில் சூர்யாவும் ஞானவேல் ராஜாவும் படத்தை குறித்து பெரிதாக பேசாமல் இருந்திருந்தாலே கங்குவா திரைப்படம் பெரிய வெற்றியை அடைந்திருக்கும் என்பது பலரது எண்ணமாக இருக்கிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top