Connect with us

பெரிய ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் எஸ்.கே… 2 ஆவது நாளும் பயங்கர வசூல்.. அமரன் 2 ஆவது நாள் வசூல் அப்டேட்.!

amaran

Tamil Cinema News

பெரிய ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் எஸ்.கே… 2 ஆவது நாளும் பயங்கர வசூல்.. அமரன் 2 ஆவது நாள் வசூல் அப்டேட்.!

Social Media Bar

தற்சமயம் தமிழ் சினிமாவில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படமாக அமரன் திரைப்படம் இருந்து வருகிறது.

சிவகார்த்திகேயன் நடித்து வந்த திரைப்படங்களிலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெரும் படமாக அமரன் திரைப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு தகுந்தார் போலவே அதன் வசூல் நிலவரம் இருந்து வருகிறது. இதற்கு முன்பே சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களில் டான் மற்றும் டாக்டர் மாதிரியான திரைப்படங்கள் 100 கோடி வசூல் செய்து பெரும் சாதனையை படைத்தன.

sk amaran

sk amaran

அமரன் திரைப்படத்தின் வசூல் அவற்றையெல்லாம் தாண்டும் என்று கூறப்படுகிறது. தீபாவளி அன்று அமரன் வெளியான நிலையில் கடந்த இரு நாட்களிலேயே 40 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பது பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

அமரன் வசூல்:

முதல் நாளில் 21 கோடி ரூபாய் வசூல் செய்த அமரன் திரைப்படம் தற்சமயம் இரண்டாவது நாளும் 19 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறது. இப்படியாக வசூல் செய்யும் பட்சத்தில் ஒரு வாரத்திலேயே இந்த திரைப்படம் 100 கோடியை தாண்டி விடும்.

எனவே கண்டிப்பாக 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை கொடுக்கும் அமரன் திரைப்படம் என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் இப்படி பெரும் வசூல் இந்த படம் கொடுத்துவிட்டால் சிவகார்த்திகேயன் சம்பளத்தை அதிகரித்து விடுவார் என்றும் ஒரு பக்கம் திரைத்துறையினர் பயந்து வருகின்றனர்.

To Top