Connect with us

தமிழ் மீடியம்ல படிச்சவனுக்கும் திறமை இருக்குன்னு அவரை பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டேன்!. – ஓப்பன் டாக் கொடுத்த சிவகார்த்திகேயன்.

sivakarthikeyan

Cinema History

தமிழ் மீடியம்ல படிச்சவனுக்கும் திறமை இருக்குன்னு அவரை பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டேன்!. – ஓப்பன் டாக் கொடுத்த சிவகார்த்திகேயன்.

Social Media Bar

தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்துவரும் அயலான் திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த திரைப்படத்தின் டீசர் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக இருக்கிறது. இந்த படத்தின் இயக்குனரான ஆர் ரவிக்குமார் ஏற்கனவே இன்று நேற்று நாளை என்கிற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இது குறித்து சிவகார்த்திகேயன் பேசும் பொழுது நான் திருச்சியில் ஒரு படப்பிடிப்பில் இருந்த பொழுது இன்று நேற்று நாளை திரைப்படம் வெளியானது. அந்த படம் எனக்கு எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக இருந்ததால் நான் அந்த படத்தை பார்க்கப் போனேன்.

அப்போது எனக்கே மிகவும் அதிசயமாக இருந்தது எப்படி இவ்வளவு குறைந்த பட்ஜெட்டில் ஒரு இயக்குனர் இவ்வளவு சிறப்பான அதுவும் ஹாலிவுட் தரத்திற்கு உள்ள ஒரு படத்தை இயக்கினார் என்று யோசித்தேன். பிறகு நான் இயக்குனரை ஃபோனில் அழைத்து பேசினேன்.

அப்போதே அவரது இயக்கத்தில் நான் ஒரு படம் நடித்து ஆக வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அதன் பிறகு தான் நாங்கள் படத்திற்கான வேலையில் இறங்கினோம் என்று கூறினார் சிவகார்த்திகேயன். பொதுவாக தமிழ் மீடியம் படிப்புக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது.

ஆங்கில வழி கல்வி கற்றால்தான் பெரும் அறிவாளியாக முடியும் என்று பலரும் நம்புகின்றனர். இந்த நிலையில் இது குறித்து சிவகார்த்திகேயன் கூறும் பொழுது இயக்குனர் ஆர் ரவிக்குமார் பள்ளி முழுவதும் தமிழ் மீடியத்தில் படித்தவர். பிறகு கல்லூரிக்கு சென்று படிக்கவில்லை அவர் அதற்கும் பதிலாக தொலைதூரக் கல்வி வழியாகத்தான் கல்லூரியை முடித்துள்ளார்.

எனவே இந்த தமிழ் மீடியம் ஆங்கில மீடியம் என்பதெல்லாம் கல்வியை வியாபாரப்படுத்துவதற்கான முறை தானே தவிர அதற்கும் அறிவுக்கு எந்தவித சம்பந்தமும் கிடையாது என்பதை எனக்கு நிரூபித்தவர் இயக்குனர் ரவிக்குமார்தான் என தனது பேட்டியில் கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

To Top