சிவக்குமாருக்கே அனுமதி தரல.. உங்களுக்கு எப்படி தர முடியும்.. பராசக்தி தலைப்புக்கு வழுக்கும் எதிர்ப்புகள்.!
இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் பராசக்தி. இந்த திரைப்படத்தில் ஸ்ரீ லீலா, ரவி மோகன், அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆனால் தற்சமயம் இந்த பராசக்தி திரைப்படத்தின் பெயர்தான் அதிக சர்ச்சையாகியுள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படத்தின் பெயர்தான் பராசக்தி. இந்த பெயர் சிவாஜி கணேசனின் ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது. அதனாலேயே அந்த பெயரில் யாரும் திரைப்படத்தில் நடிப்பது இல்லை.
ஆனால் வெகு காலங்கள் கழித்து நடிகர் சிவகார்த்திகேயன் அந்த பெயரில் திரைப்படம் நடிக்கிறார். இந்த நிலையில் சிவாஜி சமூக நல பேரவை இதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு நடிகர் சிவக்குமார் இதே போல பராசக்தி என்கிற பெயரில் ஒரு திரைப்படத்தில் நடித்தார்.
அந்த திரைப்படத்திற்கு அப்போது இதே போல சிவாஜி சமூக நல பேரவை எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனால் அந்த திரைப்படத்தின் பெயர் மீண்டும் பராசக்தி என மாற்றப்பட்டது.
இந்த நிலையில் தற்சமயம் எஸ்.கே நடிக்கும் திரைப்படத்திலும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.