Tamil Cinema News
அடுத்து எஸ்.கே செய்யும் சம்பவம்.. ஆடிப்போன பெரிய ஹீரோக்கள்.!
தற்சமயம் தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார்.
வெகு சீக்கிரத்திலேயே சிவகார்த்திகேயன் விஜய் அஜித்க்கு இணையான இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு தகுந்தார் போல ஏ.ஆர். முருகதாஸ் திரைப்படத்திற்கு பிறகு சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் சம்பளம்:
இந்த திரைப்படத்திற்கு 70 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இப்பொழுது இவர் நடிக்கும் ஏ ஆர் முருகதாஸின் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்துவிட்டது என்றால் சிவகார்த்திகேயனின் சம்பளம் 100 கோடிக்கு கூட போகும் என்று கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனுக்கு முன்பிருந்தே தமிழ் சினிமாவில் இருக்கும் விஜய் ஆண்டனி, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு மாதிரியான நடிகர்கள் கூட இன்னமும் 100 கோடி சம்பளத்தை தொடாத பட்சத்தில் சிவகார்த்திகேயனின் இந்த வளர்ச்சி என்பது அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.