News
விளம்பரத்துக்கே இந்த லெவல் காட்டுனா ஆகாது… ஆணுறை விளம்பரத்தில் நாக சைதன்யாவின் காதலி சோபிதா…
தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வரும் நடிகை என்றால் அவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நாயகி சோபிதா துலிபாலா தான்.
தற்போது இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா உடன் நிச்சயிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது அவர்களின் நிச்சயதார்த்தம் குறித்த சர்ச்சைகள் தான் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது.
இந்நிலையில் பலரும்சோபிதா துலிபாலாவை பற்றி இணையத்தில் தேட தொடங்கியுள்ளார்கள். இவர் தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் என்ற படத்தின் மூலம் வானதி என்ற கேரக்டரில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானார்.
இந்நிலையில் இவர் நடித்த விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி அது ட்ரோலுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த விளம்பரத்தை கொண்டு பலரும் சோபிதா துலிபாலாவின் காதலர் நாக சைதன்யாவை விமர்சிக்கும் விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சோபிதா துலிபாலா
தன்னுடைய வாழ்க்கையை மாடலிங் மூலம் தொடங்கிய சோபிதா துலிபாலா ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா ஃபெமினா மிஸ் இந்தியாவில் கலந்து கொண்டார். இதில் ஃபெமினா மிஸ் இந்தியா என்ற பட்டத்தை வென்றார்.
அதன் பிறகு பட வாய்ப்புகள் குவிய தொடங்கிய நிலையில் பல விளம்பரங்களிலும் நடித்து வந்தார் சோபிதா துலிபாலா.

கிடைக்கும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி வந்த சோபிதா துலிபாலா, மக்களிடையே பிரபலமானார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கிய நிலையில், தற்போது இவர் நடித்துள்ள ஆணுறை விளம்பரம் பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது.
சோபிதா துலிபாலா நடித்த விளம்பரம்
இந்நிலையில்சோபிதா துலிபாலா ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். தற்பொழுது அந்த வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டு கமெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில் அவர் படு கவர்ச்சியான உடையில் அவருடைய உடலழகை காட்டும் விதத்தில் படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார். இந்த விளம்பரத்தை பார்த்த பலரும் பலவிதமான கமெண்ட்கள் செய்து அந்த விளம்பரத்தை தற்பொழுது வைரலாகி வருகிறார்கள்.
வீடியோவை காண இங்கு கிளிக் செய்யவும்
