Bigg Boss Tamil
சான்ஸ் தரேன்னு தனி ரூமுக்கு கூட்டிட்டு போய்.. பிக்பாஸ் சௌந்தர்யாவுக்கு நடந்த அநீதி..!
திரைத்துறையில் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் என்றாலும் கூட நடிகை சௌந்தர்யாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிதான் அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு ஆஹா ஓ.டி.டி தளத்தில் வேற மாரி ஆபீஸ் என்கிற வெப் தொடரில் நடித்து வந்தார் சௌந்தர்யா. பிக் பாஸில் இவர் நடிக்க துவங்கிய பிறகு அந்த தொடரில் அவருடைய காப்பாத்திரத்திற்கும் அதிக வரவேற்பு கிடைக்க தொடங்கியது.
சௌந்தர்யா நிறைய விஷயங்களை தொடர்ந்து பிக்பாஸில் பகிர்ந்து வருகிறார். அவரது தந்தை பேக்கரி வைத்திருப்பது குறித்து எல்லாம் நிறைய பேசியிருக்கிறார் சௌந்தர்யா. அவர் பேசும் பொழுது திரைப்பட வாய்ப்பு கிடைப்பதில் நடந்த அனுபவம் குறித்து பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அவர் கூறும் பொழுது ஒருமுறை பட வாய்ப்பு தருகிறேன் என்று என்னை தனி ரூமுக்கு அழைத்துச் சென்று என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தனர். என்று கூறி கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார் சௌந்தர்யா. இப்பொழுது இந்த விஷயம் ட்ரண்டாக துவங்கியிருக்கிறது.