Cinema History
என்னால் அந்த ரஜினி படத்தை இயக்க முடியாது!.. பல ஹிட் கொடுத்த இயக்குனரையே பின் வாங்க வைத்த படம்!..
Actor Rajinikanth : தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல்ஹாசனை பெரிய நடிகர்களாக மாற்றி விட்டதில் இயக்குனர் எஸ் பி முத்துராமனுக்கும் முக்கிய பங்கு உண்டு. எஸ்.பி. முத்துராமன் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்கள் முதலே தமிழில் திரைப்படங்களை இயக்கி வருகிறார்.
அதனால் அவரது திரைப்படங்களில் நடிப்பது என்பது ஒவ்வொரு நடிகருக்கும் பெருமையான விஷயமாக இருந்து வந்தது. இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது நூறாவது திரைப்படமான ராகவேந்திரா திரைப்படத்தை எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் நடிப்பதற்கு ஆசைப்பட்டார்.
சாதாரணமாகவே ரஜினிகாந்த் ராகவேந்திராவின் பெரும் பக்தராக இருந்தார். சிறு வயது முதலே அவரது குடும்பம் ராகவேந்திராவை வணங்கியதால் ரஜினிகாந்திற்கு ராகவேந்திரா இது அதிக ஈடுபாடு இருந்தது. மேலும் கன்னட நடிகர் ராஜ்குமாரை பார்த்துதான் சினிமாவிற்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டார் ரஜினிகாந்த்.
ராஜ்குமார் பெரும் ராகவேந்திரா பக்தர் ஆவார். அதனால் ரஜினிகாந்த்தும் அதையே பின்பற்றினார். ராஜ்குமார் தனது நூறாவது திரைப்படமாக ராகவேந்திரா திரைப்படத்தில் நடித்தார். அதனால் தானும் அதே போல நடிக்க வேண்டும் என்பது ரஜினிகாந்தின் ஆசையாக இருந்தது.
இதற்காக எஸ்பி முத்துராமனிடம் போய் பேசும்பொழுது அதற்கு எஸ்.பி. முத்துராமன் ஒப்புக்கொள்ளவில்லை. நீங்கள் ஒரு ஆக்ஷன் கதாநாயகனாக இருந்து வரும்பொழுது உங்களை யாரும் ராகவேந்திராவாக ஏத்துக்க மாட்டார்கள் எனவே படம் ஓடாது என்று கூறி அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார் எஸ்பி முத்துராமன்.
இந்த படத்தை இயக்குனர் கே பாலச்சந்திரன் தான் தயாரிக்க இருந்தார். அவர் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு எஸ்.பி முத்துராமனை அழைத்து இந்த படத்தை நான் லாபத்திற்காக செய்யவில்லை ரஜினி தனது நூறாவது திரைப்படத்தை நான் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் அதுக்காக தான் செய்கிறேன் எனவே நீங்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் படத்தை எடுங்கள் எனக்கு நம்பிக்கை இருக்கிறது அந்த படம் நல்ல வெற்றியை அடையும் என்று கூறியிருந்தார் கே பாலச்சந்தர்.
ஆனாலும் எஸ் பி முத்துராமன் சொன்னது போலவே ராகவேந்திரா திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்