TV Shows
ஒருத்தவங்க இவ்ளோ ஆடுறாங்கன்னா அவங்களுக்கு சப்போர்ட் இருக்கு.. மணிமேகலை, ப்ரியங்கா விவகாரத்தில் உண்மையை உடைத்த ஸ்ரீ குமார்.!
சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் பிரியங்கா மற்றும் மணிமேகலைக்கு இடையே இருந்து வந்த பிரச்சனை அனைவரும் அறிந்ததே. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீசன் 5 இல் வி.ஜேவாக அறிமுகமானார் மணிமேகலை. அதற்கு முன்பு வரை அவர் அதில் கோமாளியாக இருந்து வந்தார்.
ஆனால் வி.ஜே ஆக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. அதனை தொடர்ந்து மணிமேகலை வி.ஜேவாக பங்கு பெற்றார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் குக்காக வந்த பிரியங்காவிற்கும் இவருக்கும் ஒத்து வரவில்லை என கூறப்படுகிறது.
இவர்கள் இருவருக்கும் இருந்து வந்த பிரச்சனையின் காரணமாக அவர் விஜய் டிவியை விட்டே விலகிவிட்டார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ஸ்ரீ குமாரிடம் இதுக்குறித்து கேட்டப்போது அவர் கூறிய அதிர்ச்சியை கொடுப்பதாக இருந்தது.
நடிகர் ஸ்ரீ குமார் கூறும்போது முன்பு போல இப்போது சின்ன திரை இல்லை என்றுதான் கூற வேண்டும். தயாரிப்பாளர்களோ அல்லது இயக்குனர்களோ ஒரு நடிகரை நடிகையை கண்டிக்க கூட முடிவதில்லை. அந்த அளவிற்கு டிவி சேனல்களின் பலத்தை இவர்கள் பயன்படுத்தி கொள்கின்றனர்.
ஒருத்தர் டிவி சேனலில் இந்த ஆட்டம் ஆடுறாங்கன்னா அவங்க டிவி சேனலின் துணை இல்லாமல் பண்ண மாட்டார்கள் என கூறியுள்ளார் ஸ்ரீ குமார்.
