News
அதை நிரூபிச்சி காட்டுங்க… பொட்டு துணி இல்லாமல் நடக்கிறேன்!.. சவால் விட்ட ஸ்ரீ ரெட்டி..
நடிகை ஸ்ரீ ரெட்டி தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவராவார். அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ஏதாவது ஒன்றை பேசுவதை வாடிக்கையாக கொண்டிருப்பார் ஸ்ரீ ரெட்டி.
சினிமாவில் இவர் குறைந்த அளவிலான திரைப்படங்களிலேயே நடித்துள்ளார். பெரும்பாலும் இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களே அதிக பிரபலமாகி வந்துள்ளன. அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை இவர் வெளியிட்டு வந்தார்.

நடிகர் பவன் கல்யாணுக்கு எதிராக பல விதமான சர்ச்சையான கருத்துக்களை இவர் முன்வைத்து வந்தார். இந்த நிலையில் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திராவில் ஜகன் மோகன் ரெட்டி தோல்வியடைந்தால் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற் கரையில் ஆடையே இல்லாமல் நடப்பதாக ஸ்ரீ ரெட்டி சொன்னதாக ஒரு தகவல் பரவி வந்தது,
முதலில் நிருபியுங்கள்:
அதே போல தற்சமயம் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தோல்வியை கண்டுள்ளார். இந்த நிலையில் எப்போது ஆடையே இல்லாமல் நடக்க போகிறீர்கள் என இதுக்குறித்து கேட்டுள்ளனர் பத்திரிக்கையாளர்கள்.
இதற்கு பதில் அளித்த ஸ்ரீ ரெட்டி நான் ஆடை இல்லாமல் நடப்பேன் என கூறவே இல்லை. நான் அப்படி கூறினேன் என்பதற்கான ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் வெளியிடுங்கள். எனது சமூக வலைத்தள பக்கத்தில் எதையும் நான் நீக்கவில்லை.

ஒரு வேளை நான் கூறினேன் என நீங்கள் நிருபித்தால் நான் கண்டிப்பாக விசாகப்பட்டினம் கடற்கரையில் உடை இல்லாமல் நடக்கிறேன் என கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.
