Connect with us

முதல் படத்திலேயே ரகசிய ஆசையை என்கிட்ட பகிர்ந்தார் ரஜினி!.. சீக்ரெட்டை கூறிய ஸ்ரீ தேவி.

rajini sri devi

Cinema History

முதல் படத்திலேயே ரகசிய ஆசையை என்கிட்ட பகிர்ந்தார் ரஜினி!.. சீக்ரெட்டை கூறிய ஸ்ரீ தேவி.

முதல் படத்திலேயே ரகசிய ஆசையை என்கிட்ட பகிர்ந்தார் ரஜினி!.. சீக்ரெட்டை கூறிய ஸ்ரீ தேவி.

Social Media Bar

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த போது ரஜினிகாந்துக்கு தமிழே தெரியாதாம். அதனால் பல படங்களில் பல இயக்குனர்களிடம் திட்டுகள் வாங்கியுள்ளார்.

இதனால் சினிமாவை விட்டு போய்விடலாம் என்றெல்லாம் எண்ணியுள்ளார். அப்படியான ரஜினிகாந்த்தான் இப்பொழுது தமிழின் டாப் நடிகர்களில் முதலாவது இடத்தில் இருக்கிறார். தமிழில் உள்ள பிரபலங்களில் உச்சத்தை தொட்ட மூன்று பிரபலங்கள் என்றால் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி மூன்று பேரையுமே கூறலாம்.

அவர்கள் மூன்று பேருமே சேர்ந்து நடித்த திரைப்படம் மூன்று முடிச்சு, மூன்று முடிச்சு திரைப்படம் வெளியான பொழுது ஸ்ரீ தேவி ரஜினிகாந்த் இருவருமே ஆரம்பகட்ட நடிகர்களாக இருந்தனர். ஆனால் அப்பொழுதே கமல்ஹாசன் பிரபலமான நடிகராக இருந்தார்.

எனவே அந்த படத்திற்கு சம்பளம் கொடுக்கும் பொழுது கமல்ஹாசனுக்கு ரூபாய் 30,000, ஸ்ரீதேவிக்கு ரூபாய் 3000, ரஜினிகாந்திற்கு ரூபாய் 2000 சம்பளமாக கொடுத்தனர். அப்போது ஸ்ரீதேவியிடம் பேசிய ரஜினிகாந்த் எனக்கு ஒரு ஆசை உண்டு ஸ்ரீதேவி. நானும் என்றாவது ஒருநாள் கமல்ஹாசன் மாதிரியே முப்பதாயிரம் சம்பளம் வாங்கும் அளவிற்கு பெரிய கதாநாயகனாக வேண்டும் என்று ரகசியமாக கூறியிருக்கிறார்.

பிறகு பல காலங்கள் கழித்து ரஜினி பெரிய ஹீரோ ஆன பிறகு இந்த விஷயத்தை ஸ்ரீதேவி ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.

To Top