Tamil Cinema News
சாய் பல்லவிக்கு அந்த மாதிரி ட்ரெஸ் கொடுப்பீங்களா? ஓப்பனாக கேட்ட ஸ்ரீ காந்த்.!
தமிழ் சினிமாவில் எவ்வளவு முயன்றும் இன்னமும் ரீ என்ட்ரி கொடுக்க முடியாத ஒரு நடிகராக ஸ்ரீகாந்த் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் கதாநாயகனாக நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் ஸ்ரீகாந்த்.
அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் என்பது குறைய துவங்கியது அவர் நடித்த திரைப்படங்களுக்கு வரவேற்புகளும் குறைய தொடங்கியது. இந்த நிலையில் அவருக்கு ஒரு நல்ல திரைப்பட வாய்ப்பாக அமைந்த திரைப்படம் தான் நண்பன் திரைப்படம்.
நண்பன் திரைப்படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ரீகாந்த் ஆனாலும் கூட அதற்கு பிறகு அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
கிடைத்த படங்களும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதனால் இப்பொழுதுவரை ஸ்ரீகாந்த் சினிமாவில் வரவேற்பை பெறாமலே இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சமீப காலங்களாக சில திரைப்படங்களில் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார். அது குறித்து சமீபத்தில் பேட்டியில் பேசியிருந்தார் அப்பொழுது நடிகைகளின் ஆடை சுதந்திரம் குறித்து அவர் பேசியிருந்தார்.
அதில் அவர் கூறும் பொழுது நடிகைகள் எந்த ஆடைகளை அணிய விருப்பப்படுகிறார்களோ அந்த ஆடைக்கு அவர்களை விட்டு விடலாம் அதை விட்டுவிட்டு யாரும் அவர்களை வற்புறுத்தி இந்த ஆடையை தான் அணிய வேண்டும் என்று கூறக்கூடாது.
நடிகைகளும் அந்த மாதிரி நிராகரிப்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும் உதாரணத்திற்கு நடிகை சாய் பல்லவியிடம் கவர்ச்சி ஆடையை போட்டுக் கொள்ளும்படி எந்த இயக்குனராவது கேட்டு விட முடியுமா? ஏனெனில் சாய்பல்லவி அந்த மாதிரி ஆடைகளை மறுத்துவிடுவார்.
அந்த ஒரு அதிகாரத்தை நடிகைகள் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் ஸ்ரீகாந்த்.
