Tamil Cinema News
அந்த பொம்மை மூஞ்சுக்கு பின்னாடி இருக்கிற ராட்சசிய பத்தி எனக்குதான் தெரியும்.. நடிகையை ஓப்பனாக கலாய்த்த ஸ்ரீ காந்த்.!
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகராக இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். 2000-களுக்கு பிறகு நிறைய புது முக நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைத்தது.
அப்படியாக வரவேற்பு பெற்றவராக நடிகர் ஸ்ரீகாந்த் இருந்தார். நடிகர் ஸ்ரீகாந்த் நடித்த ரோஜா கூட்டம் திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரும் வரவேற்பை கொடுத்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகுதான் தொடர்ந்தவருக்கு காதல் கதைக்களங்களாக அமைந்தன.
அதற்குப் பிறகு விஜய் அஜித் மாதிரி ஸ்ரீகாந்தும் ஆக்ஷன் திரைப்படங்களாக நடிக்க தொடங்கினார். அவர்களின் சில திரைப்படங்கள் கை கொடுத்தாலும் கூட நிறைய திரைப்படங்கள் அவருக்கு தோல்வியை ஏற்படுத்திக் கொடுத்தது.
அதனால் மிக சீக்கிரத்திலேயே சினிமாவில் வாய்ப்புகளை இழந்தார் ஸ்ரீகாந்த் இப்பொழுது மீண்டும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் ஸ்ரீகாந்த் சமீபத்தில் தன்னுடைய முதல் திரைப்பட அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் பேசி இருந்தார்.
அதில் அவர் கூறும் பொழுது முதல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை பூமிகாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பூமிகாவை ஒரு அழகான பொம்மை போன்ற நடிகையாக தான் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அந்த பொம்மை மூஞ்சிக்கு பின்னாடி இருக்கும் ராட்சசியை எனக்கு தான் தெரியும்.
அந்த திரைப்படத்தை எடுத்து முடிப்பதற்கு எங்களுக்கு இரண்டு வருடங்கள் தேவைப்பட்டது. அதற்கு காரணம் பூமிகா தான் என்று பேசியிருந்தார் ஸ்ரீகாந்த் ஏற்கனவே ரோஜா கூட்டம் திரைப்படத்தில் பூமிகாவால் நிறைய பிரச்சனைகள் வந்ததாக அவர் முன்பே ஒரு பேட்டியில் பேசியிருந்த நிலையில் மீண்டும் பகிரங்கமாக பூமிகா குறித்து மேடையில் பேசியிருக்கிறார் ஸ்ரீகாந்த்.
