Connect with us

நான் ரெடித்தான் வரவா!.. 1948 லேயே வந்த பாடல்!.. இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே!..

leo chandralekha

Cinema History

நான் ரெடித்தான் வரவா!.. 1948 லேயே வந்த பாடல்!.. இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே!..

Social Media Bar

Leo vijay :  தமிழ் சினிமாவில் இப்போதை விடவும் முந்தைய காலகட்டங்களில் பாடல்களுக்கான முக்கியத்துவம் அதிகமாகவே இருந்தது. ஒரு படத்தில் கதை அம்சங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவிற்கான முக்கியத்துவம் பாடல்களுக்கும் இருந்தது.

ஆனால் இப்பொழுது எல்லாம் பாடல்களே இல்லாத திரைப்படங்கள் வருகின்றன. அதை மக்களும் ஏற்றுக்கொள்ள துவங்கி விட்டனர் இந்த நிலையில் இயக்குனர் சங்கர் ஒரு படி மேலே போய் பாடல்களுக்கு அதிக செலவு செய்வதை ஒரு விஷயமாக உருவாக்கினார்.

அதனை தொடர்ந்து அப்போது வெளியான காதலர் தினம், முகவரி போன்ற திரைப்படங்களில் மற்ற இயக்குனர்களும் பாடல்களுக்கு அதிக செலவு செய்து படமாக்குவதை தொடர்ந்தனர். தற்சமயம் வெளியான லியோ திரைப்படத்தில் கூட நான் ரெடி தான் வரவா என்கிற பாடல் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டது.

அதில் ஆயிரத்திற்கும் அதிகமான நடன கலைஞர் நடனமாடினர் ஆனால் 1948 லேயே அப்படியான ஒரு படப்பிடிப்பு நடந்திருக்கிறது அப்போது வெளியான சந்திரலேகா என்னும் திரைப்படத்தில் தான் அப்படியான ஒரு பாடல் இடம் பெற்றிருக்கிறது.

அந்த பாடலுக்காக 1500 நபர்களை வேலைக்கு அமர்த்திருக்கின்றனர் இது இல்லாமல் சிறப்பு நடனம் ஆடுவதற்காக 150 பேரை மாத சம்பளத்திற்கு அமர்த்தி அவர்களுக்கு இரண்டு மாதங்கள் பயிற்சியும் கொடுத்திருக்கின்றனர்.

கிட்டத்தட்ட இப்போது எடுத்த நான் ரெடி தான் வரவா பாடலை விடவும் அதிக செலவு செய்து சந்திரலேகாவில் அந்த பாடலை படமாக்கி இருக்கின்றனர் எனவே இப்போது உள்ள சங்கர் லோகேஷ் கனகராஜன் அனைவருக்கும் மூத்த இயக்குனராக சந்திரலேகா படத்தின் இயக்குனர் எஸ் எஸ் வாசன் இருந்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...
To Top