பிக் பாஸ் முதல் நாளே நாலு பேர் அவுட் – பதறிய போட்டியாளர்கள்

நேற்றைய தினம் முதல் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. பல்வேறு பிரபலங்கள் இதில் போட்டியாளர்களாக கலந்துள்ளனர். நேற்று முதல் நாள் என்பதால் பிக் பாஸான கமல்ஹாசனை அனைவரும் சந்தித்து பேசிவிட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். பிறகு அனைவரும் வீட்டை சுற்றி பார்த்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொதுவாக வீட்டில் அதிக டாஸ்க்குகள் கொடுப்பது வழக்கம். ஆனால் இன்றுதானே முதல் நாள் ஆரம்பமாகியுள்ளது.இன்று என்ன டாஸ்க் தர போகிறார்கள் என அனைவரும் பெரிதாக கண்டுக்கொள்ளாமல் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக சில தகவல்களை வெளியிட்டார்.

Social Media Bar

அதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இருப்பதிலேயே யார் தங்கள் மனதை குறைவாக கவர்ந்தார்கள் என கூற வேண்டும். அதில் பலரும் முதலில் தயங்கினாலும் பிறகு ஒவ்வொருவரும் தங்கள் மனதை குறைவாக கவர்ந்த இரு நபர்களை கூறினர்.  இறுதியில் ஜனனி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி ஆகிய நால்வரும் குறைவான அளவில் கவர்ந்தவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் நால்வரும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரக்கூடாது வெளியே பனனா பெட்டில்தான் உறங்க வேண்டும் என பிக் பாஸ் அறிவித்தார். 

இப்படியாக வந்த முதல் நாளே டாஸ்க்கை ஆரம்பித்து வைத்தார் பிக் பாஸ்