நயன்தாரா குழந்தை பெற்றது சட்ட ரீதியாக சரியா? – அதிகரிக்கும் விவாதங்கள்

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவருமே தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக காதலர்களாக இருந்தவர்கள். சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைப்பெற்றது. தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாராதான் முதல் இடத்தை வகிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன் தினம் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாகவும், எனவே தாங்கள் தாய், தந்தையர் ஆகிவிட்டதாகவும் தெரிவித்திருந்தனர். திருமணமாகி சில மாதங்களே ஆகியுள்ள நிலையில் எப்படி இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது என்கிற கேள்வி வந்தது. அவர்கள் வாடகை தாயை அமர்த்தி குழந்தை பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் குழந்தைகள் விற்பனை என்பது சட்ட விரோதமாக அதிகமாக நடப்பதால் வாடகை தாய் அமர்த்துவதில் அரசு சில சட்டங்களை விதித்துள்ளது. அவை:

வாடகை தாய் அமர்த்தும் தம்பதிகளுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகியிருக்க வேண்டும்.

இருவரில் ஒருவருக்கு குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அவர்களுக்கு வாடகை தாயாக இருக்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும் பண ரீதியாக அவர்கள் வாடகை தாயாக இருக்க கூடாது. இந்த வாடகை தாய் முறை தம்பதிகளுக்கு உதவும் மனபான்மையில் செய்து கொடுப்பதாகவே இருக்க வேண்டும்.

வாடகை தாய்க்கு 16 மாத காலம் இன்சூரன்ஸ் செய்திருக்க வேண்டும்.

இந்த விதிமுறைகளை எல்லாம் விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதிகள் பின்பற்றி இருப்பார்களா? என்பது குறித்து தொடர்ந்து மக்களிடையே விவாதங்கள் சென்றுக்கொண்டுள்ளன.

விக்கி, நயன் இருவருமே இன்னும் இதுக்குறித்து பொது மக்களுக்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

Refresh