கோவா படத்தை கோவாலையே எடுக்கல –  உண்மையை உடைத்த வெங்கட் பிரபு

கோலிவுட் சினிமாவில் பிரபலமான ஜாலியான இயக்குனரில் ஒருவராக வெங்கட் பிரபு இருக்கிறார். வெங்கட் பிரபு தனக்கென ஒரு கூட்டணியை கொண்டவர். எப்போதுமே பார்ட்டி பண்ணும் குழு என பெயர் பெற்ற இந்த குழுவில் வைபவ், பிரேம்ஜி, சிம்பு என பலரும் உள்ளனர்.

தற்சமயம் இவர் இயக்கி வெளியான மாநாடு திரைப்படம் ஒரு நல்ல வசூலை பெற்றது. மேலும் தமிழில் முதலில் வந்த லூப் கான்செப்ட் திரைப்படம் என்பதால் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் நடைபெறும் ராஜ் வீட்ல பார்ட்டி என்கிற நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு, வைபவ் மற்றும் சில பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.

அதில் வெங்கட் பிரபுவிடம் சினிமா குறித்து பல விஷயங்களை பேசி வந்தனர். அப்போது கோவா திரைப்படம் குறித்த பேச்சு வந்தது. 2010 இல் வந்த கோவா அது வந்த காலத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட படம். ஒரு ஜாலியான திரைப்படம் என அதை கூறலாம்.

அந்த படத்தை நம்பி பலரும் அப்போது கோவாவிற்கு பயணம் செய்தனர். இதுக்குறித்து வெங்கட் பிரபுவிடம் கேட்கும்போது உண்மையான கோவா நீங்க காமிச்ச அளவுக்கு இல்லையே சார் என கேட்டனர்.

அதற்கு வெங்கட் பிரபு மொதல்ல நான் காமிச்சது கோவாவே இல்ல.. என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். கோவா படத்தில் வரும் பல காட்சிகள் சிங்கபூரில் படமாக்கப்பட்டன. பொதுவாக திரைப்படங்கள் எடுக்கும்போது இப்படி மாற்றி எடுப்பது சகஜமான விஷயம்தான். ஆனால் வெகு காலமாக கோவா ஒரு வசந்த மாளிகை என நினைத்து வந்த 90ஸ் கிட்ஸ்களுக்கு இது ஒரு ஏமாற்றமே எனலாம்.

Refresh