2011 லையே பொன்னியின் செல்வன் படமாக்க இருந்தாங்க – அதில் விஜய்யும் நடிக்க இருந்தாராம்..!

என்னதான் தென்னிந்தியாவில் பல படங்கள் 1000 கோடி வசூலை தாண்டியது என்றாலும் தமிழில் இதுவரை  ஒரு படம் கூட அவ்வளவு வசூல் சாதனையை படைக்கவில்லை என்கிற குறையை தற்சமயம் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் சரி செய்யும் என நம்பப்படுகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமாகும். இந்த திரைப்படத்த்தை இயக்குனர் மணிரத்னமே பல வருடங்களாக இயக்குவதற்கு திட்டமிட்டார். இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டே இந்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் அமைந்ததாக கூறப்படுகிறது. 

இந்த படத்தில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக இருந்தது. மகேஷ்பாபு அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்திலும், அப்போதும் விக்ரமே ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் தேர்வாகி இருக்கிறார். நந்தினி கதாபாத்திரத்தில் அனுஷ்காவும், பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் சத்யராஜும் நடிப்பது என முடிவாகியுள்ளது. ஆனால் அப்போது விக்ரம் மிகவும் பிஸியாக இருந்ததாலும் வேறு பல காரணங்களாலும் இந்த படம் அப்போது திரைப்படமாக்கப்படவில்லை.

அப்போதே படமாக எடுத்திருந்தால் அனுஷ்காவை நந்தினியாக பார்த்திருக்கலாமே என்று அனுஷ்கா ரசிகர்கள் கவலைப்படுகின்றனர். ஆனால் அப்போது படமாக்கப்பட்டிருந்தால் அருள்மொழி வர்மனாக மகேஷ் பாபு அல்லவா நடித்திருப்பார். அவரை விடவும் ஜெயம் ரவி நன்றாக நடிக்க கூடியவர் என கருத்து தெரிவிக்கின்றனர் ரசிகர்கள்.

Refresh