வாலிக்கு நிகரா பாட்டு எழுதி அவர் வாய்ப்பை பறித்த பிரபலம்.. இதுவரை தெரியாம போச்சே..!

கவிஞர் கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக மக்களால் கொண்டாடப்படும் ஒரு கவிஞராக இருப்பவர் கவிஞர் வாலி. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி பல வருடங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கவிஞராக வாலி இருந்து வந்தார்.

அதனாலேயே அவரது மார்க்கெட் என்பது பெரிதாக இருந்தது. ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு வாலி ஒவ்வொரு படத்திற்கும் பாடல் வரிகளை எழுதுவதற்கு நிறைய சம்பளம் வாங்கி வந்தார்.

இதனால் சின்ன படங்களை இயக்கம் இயக்குனர்களுக்கு வாலியை வைத்து தங்களது படங்களுக்கு பாடல் வரிகள் எழுதுவது என்பது சிரமமான விஷயமாக இருந்தது.

வாலி வாய்ப்பை பறித்த கவிஞர்:

ravi shankar
ravi shankar
Social Media Bar

அவருக்கான சம்பளத்தை அவர்களால் கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் பிரபல இயக்குனரான விக்ரமன் தொடர்ந்து வாலியிடம்தான் பாடல் வரிகளை எழுதி வாங்கி வந்தார். பூவே உனக்காக திரைப்படத்தில் கூட வாலிதான் பாடல் வரிகளை எழுதி இருந்தார்.

அந்த படத்தில் ஓம் பியாரி பாணி பூரி என்கிற ஒரு பாடல் வரும் அந்த பாடலுக்கான வரியை வாலி எழுதும் பொழுது அதில் சில வரிகளை மாற்றும் படி அந்த படத்தில் உதவியாளராக பணிபுரிந்த ரவிசங்கர் கூறினார்.

அவர் கூறியது சரியாக இருந்ததால் வாலியும் அதை ஏற்றுக் கொண்டார் இந்த நிலையில் இந்த விஷயத்தை எல்லாம் கவனித்த விக்ரமன் ரவிசங்கருக்கு வாய்ப்பு கொடுத்தார். இதனை தொடர்ந்து சூரியவம்சம் திரைப்படத்தில் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ பாடலுக்கான வரிகளை ரவிசங்கர் எழுதினார்.

அதற்கு பிறகுதான் நம்மிடமே இப்படி ஒரு கவிஞர் இருக்கும் பொழுது எதற்கு வாலியிடம் செல்ல வேண்டும் என்று நினைத்த விக்ரமன் பிறகு அவர் திரைப்படங்களில் எல்லாம் பாடல் வரிகளை ரவிசங்ரைதான் எழுத விட்டார் என்று கூறப்படுகிறது.