TV Shows
பெஸ்டிகளுக்கு ஒரு நாடகமா – 2கே கிட்ஸ்களை கவர் செய்யும் சன் டிவி
பொதுவாக 2 கே கிட்ஸ்களிடம் ஒரு பழக்கம் உண்டு. அவர்கள் தங்களுக்குள் பெஸ்டி என்கிற ஒரு புதிய உறவுமுறையை கொண்டுள்ளனர். ஒவ்வொருவரும் தங்களுக்கென பாய் பெஸ்டி மற்றும் கேர்ள் பெஸ்டி என இரு உறவுமுறையை கொண்டிருப்பர்

பொதுவாக நமக்கு நண்பர்கள் இருப்பார்கள். அதில் சிலரை உயிர் நண்பர்கள் என்போம். உயிர் நண்பன் என்பவன் மற்ற நண்பர்களை விட முக்கியமானவன் என்று கூறுவோம்.
ஆனால் 2கே வில் வந்த இந்த பெஸ்டி கலாச்சாரத்தில் இன்னும் ஒரு படி மேலே போய் பெஸ்டி என்பவர்கள் இன்னும் அதிக முக்கியத்துவத்தை பெற்றனர். ஒர் பெண்ணுக்கு திருமணம் ஆகிறது எனில் அவருக்கு தன்னுடைய கணவனை விட தன்னுடைய பெஸ்டி முக்கியமானவர். சிலருக்கு அது பாய் பெஸ்டியோ அல்லது கேர்ள் பெஸ்டியோ அவருக்கு முக்கியமான ஒரு பெஸ்டி இருப்பார்.
இந்த நிலையில் அனைத்து கண்டெண்ட்களையும் நாடகமாக்கும் சன் டிவி தற்சமயம் இந்த பெஸ்டி கான்செப்டையும் நாடகமாக்கி வருகிறது.
பிரியமான தோழி என்கிற இந்த நாடகம் தற்சமயம் சன் டிவியில் பெஸ்டிகளின் தூய நட்பை வெளிப்படுத்துவதற்காக சன் டிவியில் ஒளிப்பரப்பாகிறது.
