News
டான் 13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ? – மாஸ் காட்டும் எஸ்.கே..!
தமிழ் சினிமாவில் காமெடி கான்செப்ட்களை கொண்டும் கதாநாயகன் ஆக முடியும் என நிரூபித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்சமயம் அவர் நடித்து வெளியான டான் திரைப்படம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக இருந்த சிபி சக்ரவர்த்தி இந்த படத்தை இயக்கியுள்ளார். அவருக்கு இது முதல் படமாகும்.
பொதுவாக சிவகார்த்திகேயனுக்கு செண்டிமெண்ட் வராது என பேசப்பட்டு வந்தது. அதற்கு சவால் விடும் விதமாக டான் திரைப்படத்தில் அதிக செண்டிமெண்ட் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி இன்னும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளனர்.
நடிகர் எஸ்.ஜே சூர்யா இதில் பிரின்சிபலாக நடித்திருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஏனெனில் ஏற்கனவே எஸ்.ஜே சூர்யா மாநாடு திரைப்படத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து இருந்தார். இந்த நிலையில் வெளியான டான் திரைப்படம் 12 நாள் முடிவில் 100 கோடி வசூலை எட்டியது.
தற்சமயம் 13 நாள் வரை மொத்தமாக 102 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது டான் திரைப்படம்.
