சீக்கிரமே வர போகிறதா தளபதி 66 ? – புதிய அப்டேட்

தளபதி விஜய் நடித்து படமாக்கப்பட்டு வரும் திரைப்படம்தான் தளபதி 66. படத்திற்கு இன்னும் பெயர் எதுவும் வைக்கப்படவில்லை. பீஸ்ட் திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவு வரவேற்பை பெறாத நிலையில் அந்த எதிர்ப்பார்ப்பை இந்த திரைப்படம் நிறைவு செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் இந்த திரைப்படம் தயாராகி வருகிறது. 

இவர் தெலுங்கு இயக்குனர் ஆவார். தெலுங்கில் யவடு, மகாரிஷி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார். பொதுவாக வம்சி திரைப்படத்தில் அதிக ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதால் இந்த படத்திலும் நாம் அதிக ஆக்‌ஷன் காட்சிகளை எதிர்ப்பார்க்கலாம்.

இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்கிறார். இது ராஷ்மிகாவிற்கு இரண்டாவது திரைப்படமாகும். ஏற்கனவே இவர் சுல்தான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் சரத்குமார், ஷியாம், பிரகாஷ் ராஜ், பிரபு, யோகி பாபு போன்ற முண்ணனி நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த நிலையில் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கும் என அவர்கள் கூறியுள்ளனர். எனவே எதிர்ப்பார்த்ததை விடவும் விரைவில் பட வேளைகள் முடிவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சினி வட்டாரத்தில் பேச்சுக்கள் உள்ளன.

எப்படி இருந்தாலும் பொங்கலுக்கு நாம் தளபதி படத்தை எதிர்ப்பார்க்கலாம்.

Refresh