TV Shows
பாக்குற ஆடியன்ஸை பார்த்தா எப்படி தெரியுது!.. புது வசந்தம் சீரியலின் ட்விஸ்ட்டால் அப்செட் ஆன மக்கள்!.
Sun Tv Puthu vasantham Serial: ஏழைகள் எல்லாம் வில்லன்கள், பணக்காரர்கள் பெருந்தன்மையானவர்கள் என்கிற பாணியில் எடுக்கப்பட்டு வரும் சீரியல்தான் புது வசந்தம். சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் அதிக வரவேற்பு இருந்தது.
செல்வி என்னும் பெண்ணை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு கதை நகர்கிறது. வீட்டிற்கு ஒரே பெண்ணாக பிறக்கும் செல்வி பெரும் பணக்காரியாக இருந்தும் சொந்த பந்தங்கள் இல்லாத காரணத்தால் சொந்த பந்தம் உள்ள வீட்டில் திருமணம் செய்ய வேண்டும் என வேல்முருகனை திருமணம் செய்கிறார்.
அதே வீட்டில் வேல் முருகனின் அண்ணனான திருமுருகனை கீர்த்தி திருமணம் செய்கிறார். கீர்த்தி ஏழை வீட்டை சேர்ந்த பெண். அவர் சொத்துக்காக வஞ்சகமாக திருமுருகனை திருமணம் செய்கிறார். அவர் செய்யும் தீய வேலைகள் அவ்வப்போது வேல் முருகனுக்கு தெரியும் என்றாலும் கூட தன்னால் அண்ணனின் திருமணம் நிற்க கூடாது என அதை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே விரிசலை ஏற்படுத்துகிறார் கீர்த்தி. இதுவரையிலும் கதையில் பிரச்சனை இல்லாமல் இருந்தது. ஆனால் இதற்கு பிறகு இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் காரணம் தனது மனைவி செல்விதான் என அவரை தள்ளி வைக்கிறார் வேலு.
ஆனால் இதற்கெல்லாம் காரணம் தனது அன்னி கீர்த்திதான் என்பது முன்பே வேலுவிற்கு தெரியும். இந்த நிலையில் வேலுவிற்கு என்ன அம்னீசியாவா!.. இல்ல பாக்குற நாங்கள் லூசா.. அவனுக்குதான் எல்லாமே முன்னடியே தெரியுமே என லாஜிக்காக கேள்வி எழுப்பிவருகின்றனர் பொது மக்கள்!.
