TV Shows
மணிமேகலைக்கு வலையை வீசும் சன் டிவி.. ஆடிப்போய் விஜய் டிவி செய்த காரியம்..!
குக் வித் கோமாளிகள் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு நிரந்தரமாக விஜய் டிவியை விட்டு விலகி இருக்கிறார் மணிமேகலை. ஏனெனில் விஜய் டிவியின் நிர்வாகம் தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் மேலும் வி.ஜே பிரியங்காவிற்கு ஆதரவாக தான் அவர்கள் செயல்படுகிறார்கள் என்றும் மணிமேகலை பேசி இருக்கிறார்.
எப்பொழுது விஜய் டிவி வி.ஜே பிரியங்காவை கேள்வி கேட்கிறார்களோ அப்பொழுதுதான் மணிமேகலை திரும்ப வருவார் என்கின்றனர் ரசிகர்கள் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அடுத்து மணிமேகலை என்ன செய்யப் போகிறார் என்கிற ஒரு கேள்வி இருந்து வந்தது.
சன் டிவியின் முடிவு:
இந்த நிலையில் சன் டிவி தற்சமயம் மணிமேகலையிடம் பேசுவதற்கு யோசித்து வருகின்றனர். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மற்ற நிகழ்ச்சிகளையும் மணிமேகலைதான் தொகுத்து வழங்க உள்ளார் என்றும் சன் டிவி நினைத்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த விஷயத்தில் விஜய் டிவி மணிமேகலைக்கு ஒரு பெரிய வாய்ப்பை கொடுப்பதன் மூலமாக மீண்டும் மணிமேகலையை சமரசம் செய்யலாம் என்று நினைக்கின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான ஒரு வாய்ப்பை இவருக்கு பெற்றுக் கொடுக்கலாம் என்று ஒரு பக்கம் விஜய் டிவி யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் இன்னும் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளிவரவில்லை. விஜய் டிவியில் பிக் பாஸை மணிமேகலை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தால் அவர் விஜய் சேதுபதி உடன் சேர்ந்து பங்கெடுப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும் எனவே அது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
