Connect with us

மீண்டும் சூப்பர்மேன் வெளிவந்த ட்ரைலர்..! இந்த வாட்டி இயக்குனர் சுதாரிச்சிட்டாரு..!

superman

Hollywood Cinema news

மீண்டும் சூப்பர்மேன் வெளிவந்த ட்ரைலர்..! இந்த வாட்டி இயக்குனர் சுதாரிச்சிட்டாரு..!

Social Media Bar

இப்போது இருக்கும் சூப்பர் ஹீரோக்களிலேயே புராதானமான சூப்பர் ஹீரோ என்றால் அது சூப்பர் மேன். 1938 ஆம் ஆண்டு இது காமிக்ஸாக வந்தது. அதற்கு பிறகு இந்த கதை பல காலங்களாக படமாக்கப்பட்டு வந்துள்ளது. சூப்பர் பவர் கொண்ட கதாநாயகன் சாதாரண வாழ்க்கையில் மிக அமைதியாகவும் ஒரு பத்திரிக்கை ரிப்போர்ட்டராகவும் வாழ்கிறான் என்கிற விஷயம் சூப்பர் மேனில்தான் முதலில் வந்தது.

அதன் பிறகு ஸ்பைடர் மேனில் துவங்கி சக்திமான் வரை அதே முறையில் சூப்பர்ஹீரோவை உருவாக்கியது வேறு விஷயம். பொதுவாக சூப்பர் மேன் கதை என்னவென்றால் கிரிப்டோன் என்கிற கிரகத்தை சேர்ந்த சூப்பர் மேன் உலக அழிவின் காராணமாக பூமிக்கு அனுப்பப்படுகிறான்.

பூமியில் அவனுக்கு நிறைய சக்திகள் கிடைக்கிறது. அதை வைத்து சூப்பர் ஹீரோவாக அவன் மக்களுக்கு உதவுகிறான். ஏற்கனவே டி.சி மூன்று முறை சூப்பர் மேன் கதையை படமாக்கியுள்ளது. அதில் இறுதியாக வந்த மேன் ஆஃப் ஸ்டீல் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

புது ட்ரைலர்:

ஆனால் வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனத்திற்கு சீக்குவல் திரைப்படங்களுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். ஒரு படத்தை பல பாகங்கள் சரியாக எடுப்பது அவர்களுக்கு கஷ்டமான விஷயமாக உள்ளது.

இந்த சூப்பர் மேன் திரைப்படத்தை கார்டியன் ஆஃப் தி கேலக்ஸி திரைப்படத்தை இயக்கிய ஜேம்ஸ் கன் இயக்கியுள்ளார். மற்ற சூப்பர் மேனில் இருந்து இந்த திரைப்படம் வித்தியாசமாக தெரிகிறது. ஜஸ்டிஸ் லீக் டீம் இதில் இடம் பெற்றுள்ளனர்.

1978 இல் வந்த பழைய சூப்பர் மேன் மியூசிக்கை இதில் பயன்படுத்தியுள்ளனர். தற்சமயம் இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என கூறலாம்.

 

 

Articles

parle g
madampatty rangaraj
To Top