Tamil Cinema News
ஆர்.ஜே பாலாஜி படத்தில் அதே கதாபாத்திரத்தில் சூர்யா.. ரஜினி இயக்குனர் எழுதின கதையா?..!
ஜெய் பீம் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக மார்க்கெட் பெற்ற நடிகராக சூர்யா மாறினார். அதற்கு பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் இன்னொரு திரைப்படத்தில் நடிக்க இருந்தார் சூர்யா. இந்த நிலையில்தான் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இதனால் தா.செ ஞானவேல் படத்தை ஒத்தி வைத்துவிட்டு வணங்கான் படத்தில் நடிக்கச் சென்றார். அதுவும் அவருக்கு சரியாக செட்டாகவில்லை என்பதால் பிறகு கங்குவா திரைப்படத்திற்கு நடிக்க சென்று விட்டார் சூர்யா.
இந்த சமயத்தில்தான் இயக்குனர் ஞானவேலுக்கு ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர் வேட்டையன் என்கின்ற திரைப்படத்தை இயக்கி அந்த திரைப்படமும் நல்ல வெற்றியை பெற்றது.
சூர்யாவின் கதாபாத்திரம்:
ஆனால் கங்குவா திரைப்படத்தில் நடித்தப்பிறகு சூர்யாவிற்கு அந்த திரைப்படம் பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை. மேலும் விமர்சன ரீதியாக அதிக பாதிப்பு உள்ளானது கங்குவா. இந்த நிலையில் அடுத்து அவர் நடிக்கும் திரைப்படம் கண்டிப்பாக வெற்றி படமாக கொடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறார் நடிகர் சூர்யா.
இந்த நிலையில் சூர்யா அடுத்து நடிக்கும் திரைப்படத்தை நடிகர் ஆர்.ஜே பாலாஜி இயக்கி வருகிறார். ஏற்கனவே ஆர்.ஜே பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன் வீட்ல விசேஷம் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்திருக்கின்றன.
எனவே இந்த படமும் நல்ல வெற்றியை கொடுக்கும் என்று கூறப்படுகிறது இந்நிலையில் இந்த திரைப்படத்தில் சூர்யா வக்கீலாக நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கு முன்பு தா.செ ஞானவேல் எழுதிய கதையிலும் சூர்யாவை வக்கீலாக வைத்துதான் கதை எழுதியிருந்தார்.
ஏனெனில் ஜெய் பீம் திரைப்படத்தில் வக்கீல் கதாபாத்திரம் அவருக்கு நன்றாகவே ஒத்துப்போனது அதனை தொடர்ந்து இந்த படத்திலும் தா.செ ஞானவேல் அதையே செய்திருந்தார். எனவே அந்த கதையை தான் அவர் ஆர்.ஜே பாலாஜிக்கு கொடுத்திருப்பாரோ என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.