Movie Reviews
நெசமாவே சிறுத்தை சிவா படம்தானா? எப்படியிருக்கு கங்குவா திரைப்படம். முழு விமர்சனம்.!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை தொடர்ந்து தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கங்குவா. 700 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த பல கோடி இன மக்களின் கதையை அடிப்படையாகக் கொண்டது.
கங்குவா திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது இந்த நிலையில் இன்று வெளியாகியிருக்கும் கங்குவா திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான திரைப்படம் கங்குவா.
இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார் பெரிய பொருட்செலவில் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.
படத்தின் கதை:
படத்தின் கதைப்படி குற்றவாளிகளை கண்டறியும் சீக்ரெட் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார் சூர்யா. நடிகர் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி போன்றவர்கள் இவருடன் பணிபுரியும் சக நபர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் ஒரு வேலைக்காக கோவா செல்கிறார் சூர்யா.
அந்த இடத்தில் ஒரு சிறுவனுடன் இவருக்கு பழக்கம் கிடைக்கிறது இந்த சிறுவன் தொடர்ந்து சூர்யாவிடம் அவருக்கு தெரியாத விஷயங்களைப் பற்றி பேசி வருகிறார். முக்கியமாக ஒரு சத்தியம் குறித்து தொடர்ந்து அவன் பேசி வருகிறான்.
மேலும் கங்குவா என்கிற ஒரு கதாபாத்திரம் குறித்தும் அவன் பேசுகிறான் யார் இந்த கங்குவா என்பது சூர்யாவிற்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது பிறகு தான் அந்த கங்குவா என்பது தன்னுடைய முன் ஜென்ம கதாபாத்திரம் என்பது சூர்யாவிற்கு தெருகிறது.
யார் அந்த கங்குவா அவன் என்ன செய்தான் இந்த சத்தியத்திற்கும் இப்பொழுது இருக்கும் சூர்யாவிற்கும் என்ன சம்பந்தம் ஏன் இந்த சத்தியம் 700 வருடங்களாக காக்கப்பட்டு வருகிறது என்பதுதான் கங்குவா. திரைப்படத்தின் முழு கதை.
வியப்பூட்டும் திரைப்படம்:
பேரரசுகள் உருவாகிக் கொண்டிருந்த அதே சமயம் தமிழ்நாட்டில் பழங்குடியின மக்களின் ராஜ்ஜியம் தனியாக நடந்து கொண்டிருந்தது அந்த ராஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் கங்குவா திரைப்படத்தின் கதை இந்த படத்தில் சூர்யா வாழும் பகுதி ஒரு மாதிரியாகவும் பாபி தியோல் வாழும் பகுதி மற்றொரு மாதிரியும் காட்டப்பட்டுள்ளது.
சூர்யா வாழும் பகுதி இயற்கை எழிலுடன் செழிப்பான ஒரு பூமியாக இருக்கும். ஆனால் பாபிஜியோலின் உலகம் அவ்வளவுக்கும் மாறுபட்டு அதிக ரத்தத்துடன் எலும்பு கூடுகளுடனும் இருக்கும் இந்த இரண்டு இன குழுக்களுக்கு இடையே ஏற்பட போகும் பிரச்சனை.
இதில் தன்னுடைய இனத்துக்காக கங்குவா செய்யப் போகும் விஷயங்கள் ஆகியவைதான் திரைப்படத்தின் கதையாக இருக்கிறது. படம் துவங்கி சில நேரங்களிலேயே இந்த திரைப்படம் உண்மையிலேயே இயக்குனர் சிறுத்தை சிவாவின் திரைப்படம் தானா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு வருகிறது.
ஏனெனில் சிறுத்தை சிவா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இதுவரை இப்படி ஒரு திரைப்படத்தை எடுத்தது கிடையாது. முழுக்க முழுக்க ஹாலிவுட் தரத்தில் அமைந்திருக்கிறது கங்குவா திரைப்படம். படத்தில் செய்யப்பட்டிருக்கும் மேக்கப்களில் துவங்கி செட் ஒர்க் வரை அனைத்தும் மிக கச்சிதமாக செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த படத்தில் நட்டி நடராஜன், போஸ் வெங்கட், கருணாஸ் போன்ற நடிகர்களுக்கு சிறப்பான கதாபாத்திரங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றை மிக சிறப்பாக அவர்கள் நடித்தும் கொடுத்திருக்கின்றனர். சொல்லப் போனால் தமிழ் சினிமாவில் மக்களுக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும் திரைப்படமாக கங்குவா திரைப்படம் அமைந்திருக்கிறது.
எனவே கண்டிப்பாக இந்த திரைப்படம் பெரிய வசூலை பெற்றுக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. அமரன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு முக்கியமான தமிழ் சினிமாவாக கங்குவா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
