கங்குவா பிரச்சனைக்கு பிறகு தெளிவு பெற்ற சூர்யா.. எடுத்த முக்கியமான முடிவு.. ஷாக்கான இயக்குனர்கள்.!
மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை தூண்டிய காரணத்தினால் கங்குவா திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. நடிகர் சூர்யாவை பொருத்தவரை அவர் ஒவ்வொரு முறையும் கதைக்களங்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தாலும் கூட அவற்றில் சில படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்து விடுகின்றன.
விஜய் அஜித் வந்த சமகாலத்தில் சூர்யாவும் சினிமாவிற்கு வந்தார். ஏனெனில் அவர்களின் இடத்தை சூர்யாவால் பிடிக்க முடியாமல் போனதற்கு இந்த கதை தேர்ந்தெடுப்பும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்த நிலையில் சூரியா ஒரு முக்கியமான முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது நண்பர்கள் கூறுகிறார்கள் தெரிந்தவர்கள் என்பதற்காக எல்லாம் இனி திரைப்படங்களில் நடிக்க போவது கிடையாது.
சூர்யாவின் முடிவு:

படத்தின் கதையை ஆராய்வதற்காக ஒரு குழுவை அமைக்க போகிறார் சூர்யா. அந்தக் குழு கதையை ஓகே செய்தால் மட்டும்தான் சூர்யா நடிப்பார் என்கிற நிலை இருக்கும் என்று கூறப்படுகிறது. ஹிந்தி சினிமாவில் நடிகர் சல்மான் கானுக்கு ஆலோசராக ஒரு நபர் இருந்து வருகிறார்.
தொடர்ந்து சல்மான்கானுக்கு நல்ல கதைகளை அவர்தான் தேர்ந்தெடுத்து வருகிறார். எனவே அந்த நபரிடம் இதற்காக உதவி கேட்டு இருக்கிறாராம் சூர்யா. எனவே சூர்யா இனி நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் அவருக்கு வெற்றியை கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.