தெலுங்கு நிகழ்ச்சியில் மேடையிலேயே மகேஷ் பாபுவை அந்த வார்த்தை சொல்லி அவமானப்படுத்திய சூர்யா… தைரியம் அதிகம்தான்..!

Actor Surya is an actor who is constantly getting opportunities in Tamil. He recently participated in a Telugu show. Then the things he said about actor Mahesh Babu are trending

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சூர்யா இருந்து வருகிறார். ரஜினி விஜய் அஜித் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் பெரும்பான்மையாக ஒரே மாதிரியான திரைக்கதைகளை தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.

அதில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்கள் வெகு சிலரே, அந்த வரிசையில் சூர்யாவும் ஒருவர். அதனால் சூர்யா திரைப்படங்கள் அதிக வசூலை கொடுக்கவில்லை என்றாலும் கூட மக்கள் மத்தியில் பேசப்படும் படங்களாக தான் இருந்து வருகின்றன.

கங்குவா விளம்பரம்:

இந்த நிலையில் அடுத்து சூர்யா நடித்துவரும் திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் இந்த படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதையும் தாண்டி ஒரு வரலாற்று படமாக உருவாகி இருக்கிறது.

Social Media Bar

700 வருடங்களுக்கு முன்பு இருந்த பழங்குடியினருக்கு நடுவே நடந்த சண்டையை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதைகளம் அமைந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பிரமோஷனுக்காக ஒவ்வொரு மொழியிலும் சென்று விளம்பரம் செய்து வருகிறார் சூர்யா.

இதற்கு நடுவே சமீபத்தில் அவரது பழைய வீடியோ ஒன்று அதிக வைரல் ஆகி வருகிறது. தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில் மேடைக்கு சென்ற சூர்யா மகேஷ் பாபு குறித்து அதில் பேசியிருந்தார்.

அதில் அவருக்கு கூறும்போது மகேஷ் பாபுவின் முக பாவனைகள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்று கூறுவார் அதற்க்கு அனைவரும் கைத்தட்டினார்கள். ஆனால் உண்மையில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவிற்கு முகத்தில் முகபாவனைகளை பெரிதாக வராது அதை கிண்டல் செய்யும் வகையில் தான் சூர்யா அங்கு பேசியிருந்தார்.