Tamil Cinema News
எதுக்காக அந்த பையனை காக்க வைக்கிறீங்க!.. செக்யூரிட்டி செயலால் கடுப்பான விஜய் ஆண்டனி!..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் விஜய் ஆண்டனி. வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதால் இவரது நடிப்பிற்காக ஒரு பெரும் ரசிக பட்டாளம் இவருக்கு இருந்து வருகிறது.
விஜய் ஆண்டனி திரைப்படம் என்றால் அதை திரையரங்குகளில் பார்க்கலாம் என்பதே மக்கள் பலரின் விருப்பமாக இருக்கிறது. சமீபத்தில் அவர் இயக்கிய பிச்சைக்காரன் 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நிஜ வாழ்க்கையிலும் கூட மிக நல்லவராக இருந்து வருகிறார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி குறித்து சுவிக்கி டெலிவரி செய்யும் பையன் ஒரு பேட்டியில் கூறும்போது ஒருமுறை விஜய் ஆண்டனி வீட்டிற்கு டெலிவரி கொடுக்க சென்றிருந்தேன்.
அவர்கள் பணம் கொடுக்கிறேன் என என்னை வெயிட் செய்ய சொன்னார்கள். அப்போது எனக்கு பின்னாள் இருந்து வந்த விஜய் ஆண்டனி நான் நிற்பதை பார்த்து என்னவென விசாரித்தார். பணம் வாங்க வெயிட் பண்றேன் சார் என கூறினேன்.
உடனே செக்யூரிட்டியை அழைத்த விஜய் ஆண்டனி எதற்காக அந்த பையனை இவ்வளவு நேரம் காத்திருக்க வைத்துள்ளீர்கள் என சத்தம் போட துவங்கிவிட்டார். பிறகு என்னிடம் தண்ணீர் குடிக்கிறாயா தம்பி? என கேட்டார் என விஜய் ஆண்டனி குறித்து கூறியுள்ளார் அந்த டெலிவரி பையன்.
