Tag Archives: மணிகண்டன்

பாட்ஷாவை விட சிறந்த படம் ஒன்னு இருக்கு.. ரஜினியிடம் நேருக்கு நேர் கூறிய மணிகண்டன்.!

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக தனது வாழ்க்கையை துவங்கியார் நடிகர் மணிக்கண்டன். அதற்கு பிறகு படிப்படியாக உயர்ந்து தற்சமயம் கதாநாயகனாக மாறியிருப்பவர் நடிகர் மணிகண்டன். மணிகண்டனின் நடிப்புக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது.

ஏற்கனவே அவர் நடித்த குட் நைட் திரைப்படம் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்து அவர் நடித்த லவ்வர் திரைப்படமும் ஓரளவு வரவேற்பை பெற்றது. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் மீது மணிகண்டனுக்கு அதிக மரியாதை உண்டு. ரஜினிகாந்தை நேரில் சந்தித்தப்போது நடந்த அனுபவத்தை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் மணிகண்டன் கூறும்போது ரஜினி சாரை நாங்கள் ஒரு குழுவாக பார்க்க சென்றோம்.

அப்போது அவர் என் படத்தில் எந்த படம் பிடிக்கும் என கேட்டார். பெரும்பாலும் அனைவரும் பாட்ஷா என்று கூறினர். ஆனால் நான் மட்டும் அண்ணாமலை என கூறினேன். ஏன் அண்ணாமலையை கூறுகிறீர்கள் பாட்ஷா நல்ல படம் இல்லையா என ரஜினி சார் கேட்டார்.

உடனே நான் கூறினேன் பாட்ஷா நல்ல படம்தான் சார். ஆனால் பாட்ஷாவில் வில்லனை எப்படியும் கொன்றுவிடுவீர்கள். ஆனால் அண்ணாமலையில் நண்பன்தான் வில்லன். நண்பனை என்ன செய்ய முடியும். அவ்வளவு பெரிய ஆளாக ஆன பிறகு அண்ணாமலை ச்சீ என்ன இப்படி ஆகிட்டோம் என தன் தாயிடம் அனைத்தையும் கொடுத்து அசோக்கிடமே கொடுக்க சொல்லும் இடத்தில் அவன் பெரிய மனிதன் ஆகின்றான் சார் என கூறியுள்ளார் மணிகண்டன்.

அதனை கேட்ட ரஜினிகாந்த் ஆமால்ல. அண்ணாமலை ஒரு சிறப்பான படம் என அவராகவே கூறிக்கொண்டார் என்று அந்த நிகழ்வை பகிர்ந்துக்கொண்டார் மணிகண்டன்.

முதல் நாளே வரவேற்பை பெற்ற குடும்பஸ்தன் திரைப்படம்.. வசூல் ரிப்போர்ட்!.

நடிகர் மணிகண்டன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். அவரது சிறப்பான நடிப்பின் காரணமாக அவர் நடிக்கும் படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது. அவர் நடித்த குட் நைட் திரைப்படமே நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதனை தொடர்ந்து அடுத்து லவ்வர் என்கிற திரைப்படத்தில் நடித்தார் மணிகண்டன். அந்த திரைப்படம் அவருக்கு ஓரளவுதான் வரவேற்பை பெற்று கொடுத்தது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் நடிப்பில் குடும்பஸ்தன் என்கிற படம் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படமும் குட் நைட் போலவே ஒரு குடும்ப படமாக அமைந்துள்ளது. திருமணம் ஆகி நிறைய கமிட்மெண்ட்டில் இருக்கும் மணிகண்டனுக்கு இடையில் ஒரு பத்து மாதம் வேலை இல்லாமல் போகிறது. அதனை சரி செய்ய என்ன செய்கிறார் என்பதே கதையாக இருக்கிறது.

சாமானிய மனிதன் ஒரு குடும்பத்தை நடத்த படும் அவஸ்தைகளை விவரிக்கும் வகையில் இதன் கதை அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை நக்கலைட்ஸ் யூ ட்யூப் சேனல் டீம்தான் படமாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் இந்த திரைப்படம் முதல் நாளே 80 லட்ச ரூபாய்க்கு ஓடியுள்ளது. படத்தின் பட்ஜெட் மிகவும் குறைவு, மேலும் ஒரு மாதத்திலேயே இந்த கதையை படமாக்கி விட்டதாக கூறப்படுகிறது. எனவே கண்டிப்பாக இந்த வசூலே படத்திற்கு நல்ல வசூலாகதான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனிமே எவனுக்கும் கல்யாணம் பண்ற ஆசையே வராது.. வரவேற்பை பெறும் குடும்பஸ்தன் ட்ரைலர்.. மணிகண்டனின் அடுத்த படம்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் அடுத்த தலைமுறை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் மணிகண்டன். மணிகண்டனை பொறுத்தவரை அவர் தனக்கென தனி நடிப்பை  கொண்டவராக இருந்து வருகிறார். இதனாலேயே அவரது படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே மணிகண்டன் நடித்த குட் நைட் திரைப்படம் மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருந்தது. அந்த படம் மூலம் படத்தின் கதாநாயகிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து அடுத்து மணிகண்டன் நடித்த திரைப்படம் லவ்வர். லவ்வர் திரைப்படத்தில் குட் நைட் திரைப்படத்தில் இருந்து முற்றிலுமாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மணிகண்டன். அந்த படம் கொஞ்சம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும் கூட படத்திற்கு கொஞ்சம் வரவேற்பு இருக்கவே செய்தது.

இந்த நிலையில் மீண்டும் குடும்ப ஆடியன்ஸை கவர் செய்யும் வகையில் குடும்பஸ்தன் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார் மணிகண்டன். திருமணமாகாமல் ஜாலியாக இருக்கும் பசங்களுக்கு திருமணம் செய்து வைப்பதன் மூலம் அவர்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.

அவர்கள் வாழ்க்கை எவ்வளவு மோசமாகிறது என்பதை காமெடியாக சொல்லும் கதையாக இந்த படத்தின் கதையானது இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.

அந்த ட்ரைலருக்கே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

முகநூலில் பெண்ணோடு பழக்கம்.. மலேசியா சென்று அனுபவித்த டார்ச்சர்… மணிகண்டன் ஓப்பன் டாக்..!

இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக கூட்டமாக சில நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். அதில் தமிழில் பரத் சித்தார்த் மாதிரியான நடிகர்கள் எல்லாம் ஓரளவு வரவேற்பு பெற்று நடிக்க சென்றனர்.

ஆனால் அந்த படத்தில் நடித்த மணிகண்டனுக்கு மட்டும் அப்போது பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை .பாய்ஸ் திரைப்படத்திற்கு முன்பே காதல் யுகா மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் இவர் நடித்தார்.

வெகு காலங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்து அவர் பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் போது யுகா திரைப்படத்தில் நடிக்கும் பொழுதே எனது தந்தை இறந்து விட்டார்.

manikandan

நடிகர் மணிகண்டன்:

அவர் நிறைய கடன் வாங்கி வைத்திருந்தார். என்னுடைய சம்பாத்தியத்தை வைத்து அதை ஓரளவு அடைத்துவிட்டேன். என்னுடைய வாழ்க்கையில் நிறைய கஷ்டம் துயரங்களை நான் பார்த்திருக்கிறேன். நான் நிறைய பேரை காதலித்திருக்கிறேன்.

ஆனால் அதில் நிறைய தோல்விகளையும் கண்டிருக்கிறேன். எனக்கு வயது 42 ஆகிவிட்டது. முகநூல் மூலமாக மலேசியா பெண்ணுடன் பேசி பழகினேன். பிறகு அவரை பார்க்க மலேசியாவும் சென்றேன். அங்கு அவர் மூலமாக எக்கச்சக்கமான டார்ச்சர்களை அனுபவித்தேன். பிறகு எப்படியோ தப்பி வந்துவிட்டேன் என்று கூறி இருக்கிறார் மணிகண்டன்.

கவினும் மணிகண்டனும் வேற லெவல் பண்றாங்க!.. முன்னணி இயக்குனரிடம் இருந்து வந்த பாராட்டு!..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களாக கவின் மற்றும் மணிகண்டன் இருவரும் உள்ளனர். சினிமாவில் தற்சமயம் குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஹீரோ கிடைப்பது என்பது பஞ்சமாகியுள்ளது.

முன்பெல்லாம் ஹீரோக்கள் அதிக சம்பளம் வாங்காததால் சத்யராஜ், விஜயகாந்த் மாதிரியான பெரிய ஹீரோக்களை வைத்து கூட சின்ன தயாரிப்பாளர்கள் படம் தயாரித்து வந்தனர். ஆனால் இப்போது பெரிய ஹீரோக்கள் வாங்கும் சம்பளத்திற்கு அவர்களை எல்லாம் சின்ன படத்திற்கு அழைக்கவே முடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

kavin

இந்த நிலையில் சின்ன தயாரிப்பாளர்கள் படத்தில் நடிப்பதற்கு தற்சமயம் கவின் மணிகண்டன் மாதிரியான ஹீரோக்கள்தான் தேவையாக இருக்கின்றனர். டாடா திரைப்படம் கவினுக்கும், குட் நைட் திரைப்படம் மணிகண்டனுக்கும் முக்கிய படங்களாக அமைந்தன.

இதுக்குறித்து இயக்குனர் செல்வராகவன் பேசும்போது கவின், மணிகண்டன் இருவருமே சிறந்த நடிகர்கள். இருவருமே எதார்த்தமாக நடிக்கின்றனர். எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை நடிக்க கூடிய திறன் இவர்கள் இருவருக்குமே இருக்கிறது. இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வரம் என கூறியுள்ளார் செல்வராகவன்.

இத்தனை தடவை உத்தம வில்லன் பார்த்தும் இதை கவனிச்சது கிடையாது!.. வியக்க வைத்த நடிகர் மணிகண்டன்!..

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த நடிகராவார். அவர் நடித்த பல படங்களில் பொதுவாக பல விஷயங்களை அவர் பேசியிருப்பார். ஆனால் மேலோட்டமாக படத்தை பார்க்கும்போது அது புரியாது.

அப்படியாக உத்தம வில்லன் திரைப்படத்தில் நுட்பமாக கமல்ஹாசன் காட்சிப்படுத்திய விஷயங்களை விளக்கியுள்ளார் நடிகர் மணிக்கண்டன். அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் கமல்ஹாசன் இரணியனாக நடித்திருப்பார் கமல்ஹாசன்.

kamalhaasan

எவ்வளவோ நாடகங்கள் இருக்கும்போது கமல்ஹாசன் ஏன் இரணியன் நாடகத்தை போட வேண்டும். ஏனெனில் அவரது வாழ்க்கைக்கும் அவர் நடிக்கும் அந்த படத்திற்கும் இடையே நிறைய தொடர்பு இருக்கும். இரணியன் கதையை பொறுத்தவரை தனது மகன் தன் முன் வேறொருவனை புகழ்வதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது.

தன் மகன் தன்னைதானே புகழ வேண்டும் என்கிற ஆதங்கம் இருக்கும். அதே போல கமல்ஹாசனின் மகளான பார்வதி கமல்ஹாசனை அப்பா என்று அழைக்க மாட்டார். மாறாக ஜெய்ராமைதான் அப்பா என அழைப்பார். அந்த இடத்தில் இரணியன் பட்ட துன்பத்தை கமலின் கதாபாத்திரமும் படும்.

இதே போல ஒரு காட்சியில் மீன் பிடித்து கொண்டிருப்பதை கமல் பார்த்துக்கொண்டிருப்பார். அந்த மீன் படகில் விழுந்து துடித்துக்கொண்டிருக்கும். அதே சமயம் கமலின் மூக்கில் இருந்து ரத்தம் வரும். எப்படி அந்த மீன் வாழ்வா சாவா என துடித்துக்கொண்டுள்ளதோ அதே போல கமலும் புற்றுநோயால் வாழ்வா சாவா என்கிற நிலையில் இருப்பார்.

இப்படி பல விஷயங்களை அந்த படம் விரிவாக பேசுகிறது என்கிறார் மணிகண்டன்.

அந்த மக்களை பார்த்துதான் உண்மையான வாழ்க்கையை கத்துக்கிட்டேன்.. மணிகண்டனுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை சொல்லி கொடுத்த நிகழ்வு!.

தமிழில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவராக இருந்து வருகிறார் நடிகர் மணிகண்டன். இவருக்கு ஜெய் பீம் திரைப்படம் முக்கியமான திரைப்படம். அதற்கு முன்பு காலா மாதிரியான திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட ஜெய் பீம் திரைப்படத்தில்தான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் மணிகண்டன்.

அந்த படத்தின் மூலமாக பிறகு குட் நைட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. குட் நைட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த லவ் டுடே திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். மணிகண்டன் தற்சமயம் தனது சம்பளத்தையும் நான்கு கோடியாக அவர் உயர்த்தி இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

manikandan

இந்த நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கும்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். அதில் கூறும் பொழுது பழங்குடியின மக்களாக நான் நடிக்க இருந்ததால் பழங்குடியின மக்களோடு சேர்ந்து வாழ்ந்து பார்த்தால்தான் அந்த கதாபாத்திரத்தில் சரியாக நடிக்க முடியும் என்று இயக்குனர் என்னை அந்த மக்களோடு வாழ விட்டார்.

அப்பொழுதுதான் அந்த மக்கள் எவ்வளவு வறுமையில் தங்களது வாழ்க்கையை நடத்துகின்றனர் என்பதே எனக்கு புரிந்தது. ஒரு மாதம் அந்த மக்களுடன் நான் வாழ்ந்து வந்தேன். எந்த ஒரு விஷயமும் அவர்களிடம் இல்லை என்றாலும் கூட அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.

அப்போதுதான் ஒரு விஷயம் எனக்கு புரிந்தது. மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் ஏதாவது ஒன்று கிடைத்தால்தான் நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்று அர்த்தம் இல்லை. முதலில் நாம் மனதில் நினைக்க வேண்டும் நாம் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என்று அப்பதான் நமக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும் இவ்வளவு துன்பங்களுக்கு இடையில் இவர்களே மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது நாம் ஏன் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்பதுதான் எனக்கு அப்பொழுதைய கேள்வியாக இருந்தது என்று கூறுகிறார் மணிகண்டன்.

என் கழுத்துல காம்பஸை எடுத்து வச்சிட்டான்!.. காலேஜ்ல பொண்ணு விஷயத்தில் சிக்கிய மணிகண்டன்…

Actor Manikandan: அடுத்த தலைமுறை நடிகராக தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் நடிகர் மணிகண்டன் முக்கியமானவர் என கூறலாம். ஏனெனில் மற்ற நடிகர்கள் எல்லாம் அடுத்து ஒரு ஆக்ஷன் ஹீரோவாக வருவதற்கான தகுதியை கொண்டிருந்தாலும் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கும் சிறந்த நடிகர்கள் தமிழில் கிடைப்பது கடினம் என்று கூறலாம்.

ஆனால் மணிகண்டனை பொருத்தவரை அவர் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிக்க கூடியவராக இருக்கிறார். ஜெய் பீம் திரைப்படத்தில் பழங்குடி மக்களாக அவர் நடித்திருந்த கதாபாத்திரம்தான் பெரிதாக பேசும் கதாபாத்திரமாக அமைந்தது.

manikandan

அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் அதிகமாக வர துவங்கியது. இந்த நிலையில் அவர் அடுத்து நடித்த குட் நைட் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல சாதனையை படைத்ததுடன் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற திரைப்படமாக அமைந்தது. தற்சமயம் லவ்வர் என்கிற திரைப்படத்தில் நடித்து அதுவும் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் மணிகண்டனுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மணிகண்டன் மிமிக்கிரி ஆர்டிஸ்டாக இருந்தார். கல்லூரிகள் திருமணங்களுக்கு சென்று அங்கு மிமிக்கிரி செய்வதை வேலையாக கொண்டிருந்தார்.

மிரட்ட வந்த இளைஞன்:

அந்த சமயத்தில் ஒரு கல்லூரியில் சூர்யா போல அவர் மெமிக்கரி செய்த பொழுது அதை பார்த்து அசந்து போன ஒரு பெண் அவரை பார்த்துக்கொண்டே இருந்ததாம். பிறகு அவர் பேசி முடித்த பிறகு அவரிடம் வந்த அந்த பெண் கண்ணை மூடி கேட்கும் பொழுது சூர்யா பேசுவது போலவே இருந்தது.

actor-manikandan

நான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை என்று கூறி மகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு சென்றுள்ளது. இந்த நிலையில் திடீரென்று தூரத்தில் இருந்து வந்த ஒரு இளைஞன் கையில் காம்பஸோடு வந்து அதை மணிகண்டனின் கழுத்தில் வைத்திருக்கிறான்.

வைத்துவிட்டு அழுது கொண்டே அந்த பெண் உன்னிடம் சிரித்து சிரித்து பேசினாலே என்ன பேசினாள் என்று கேட்டிருக்கிறான். இல்லை நான் மிமிக்ரி செய்ததற்கு பாராட்டதான் அந்த பெண் வந்தார் என்று மணிகண்டன் பயந்து கொண்டே கூடியிருக்கிறார் இந்த அனுபவத்தை இவர் பேட்டியில் அவர் பகிர்ந்து இருக்கிறார்.

ரஞ்சித் அண்ணா அதை செஞ்சா காரணத்தோடதான் செய்வார்!.. லோகேஷ் கனகராஜை மறைமுகமாக கலாய்த்த மணிகண்டன்!..

Director Pa Ranjith : தமிழில் விழிப்புணர்வு திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பா.ரஞ்சித் இvar இயக்கும் திரைப்படங்கள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் கதைகளாக இருக்கும்.

அதே சமயம் அந்த கதைகளுக்குள் சில முக்கியமான அரசியலையும் அவர் பேசியிருப்பார். உதாரணமாக கபாலி திரைப்படத்தில் சிங்கப்பூரில் பண்ணை அடிமை முறையில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை நிறைய காட்சிப்படுத்தி இருப்பார்.

Pa-Ranjith

நடிகர் மணிகண்டன் ஜெய் பீம் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே காலா திரைப்படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்திருப்பார். எனவே இயக்குனர் பா.ரஞ்சித்துடன் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு உண்டு. இந்த நிலையில் அதற்குப் பிறகு மணிகண்டனுக்கு பா.ரஞ்சித் எந்த திரைப்படத்திலும் வாய்ப்புகள் கொடுக்கவில்லை.

வாய்ப்பளிக்காத ரஞ்சித்:

ஆனால் ஜெய் பீம், குட் நைட் என்று நிறைய நல்ல படங்களில் அதற்குப் பிறகு மணிகண்டன் நடித்து விட்டார். ஏன் மணிகண்டனுக்கு இந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது பேசிய மணிகண்டன் கூறும் பொழுது நான் பார்த்த படங்களில் மிகவும் ரசித்து பார்த்த திரைப்படங்கள் பா.ரஞ்சித்தின் திரைப்படங்கள் தான்.

அதிலும் முக்கியமாக சார்பாட்டா பரம்பரை எனக்கு மிக மிக பிடித்த திரைப்படம் எனக் கூறலாம். அந்த திரைப்படத்தை பார்த்து முடித்த பிறகு நான் கோபமாக ரஞ்சித் அண்ணாவிற்கு ஃபோன் செய்தேன். ஏன் எனக்கு சார்பட்டா பரம்பரை படத்தில் ஒரு கதாபாத்திரம் கூட கொடுக்கவில்லை அப்படி கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கேட்டேன்.

actor-manikandan

ஆனால் பா ரஞ்சித்தை பொருத்தவரை அவர் ஒரு கதாபாத்திரத்திற்கு நாம் தகுதியாக இருந்தால் மட்டும்தான் நமக்கு அந்த வாய்ப்பை கொடுப்பார். நமக்காக வேண்டி அந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க மாட்டார் என்று கூறியிருந்தார்.

கிட்டத்தட்ட அவர் கூறியது லோகேஷ் கனகராஜை கூறியது போலதான் இருந்தது. ஏனெனில் லோகேஷ் கனகராஜ் அவர்களின் படத்திற்கு யார் வாய்ப்பு தேடி வந்தாலும் அவர்களுக்கு என்று ஒரு கதாபாத்திரத்தை படத்தில் வைத்து விடுவார். அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து விடுவார் ஆனால் பா.ரஞ்சித்தை பொறுத்தவரை அந்த படத்திற்கு அந்த கதாபாத்திரம் தேவையாக இருந்தால் மட்டுமே வைப்பார் என்று கூறுகிறார் மணிகண்டன்.

குட் நைட் படத்தை பார்த்துட்டு எங்கம்மா சொன்னதை மறக்க மாட்டேன்!.. இதையா கவனிச்சீங்க!.. மணிகண்டனுக்கு நடந்த சம்பவம்!..

Goodnight Manikandan: தமிழில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் முக்கியமானவராக நடிகர் மணிகண்டன் இருக்கிறார். ஜெய் பீம் திரைப்படம்தான் மணிகண்டனுக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

பழங்குடி இன மக்களை சேர்ந்த நபராக அதில் நடித்திருந்த மணிகண்டன் மிகச் சிறப்பாக அவரது நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரத் துவங்கி விட்டன. அதற்கு பிறகு அவர் நடித்த குட் நைட் திரைப்படம் ஜெய் பீம் படத்திலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட ஒரு கதை களமாகும்.

ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் வாழும் ஒரு இளைஞனுக்கு இருக்கும் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு செல்லும் இந்த கதை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் மணிகண்டனை பொறுத்தவரை அவர் நடிக்கும் எந்த திரைப்படத்தையும் அவர் பார்க்கவே மாட்டாராம்.

படத்தை பார்த்த அம்மா:

ஏனெனில் அவர் நன்றாக நடிப்பதில்லை என்று அவருக்கு தோன்றுமாம் இதை அவரே ஒரு பேட்டி கூறியிருக்கிறார். இந்த நிலையில் குட் நைட் திரைப்படத்தை தனது தாய் பார்த்துவிட்டு வந்து அவரது அனுபவத்தை பகிர்ந்த விஷயத்தை மணிகண்டன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது அந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு இரண்டு நாள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன் சாப்பாடு கூட சாப்பிட முடியவில்லை என்று அவரது தாய் ஆனந்தமாக கூறினாராம். சரி நமது நடிப்பை பாராட்டி தான் அப்படி கூறுகிறார் என்று நினைத்தபொழுது அதெல்லாம் இல்லை உனக்கு கல்யாணம் ஆவது போன்ற காட்சி படத்தில் இருந்தது அதை பார்ப்பதற்கு மிக ஆனந்தமாக இருந்தது என்று கூறி இருக்கிறார் மணிகண்டனின் தாய்.

அதற்கு பதில் அளித்த மணிகண்டன் எனது திருமணத்தை திரைப்படத்தில் மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும். எனவே எப்பொழுது எல்லாம் எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அந்த படத்தை வைத்து பார்த்துக் கொள் என்று நகைச்சுவையாக கூறி இருக்கிறார்.

கவினுக்கு அவ்வளவு சம்பளம் தராங்க!.. நான் என்ன தக்காளி தொக்கா… சம்பள பிரச்சனையில் இறங்கிய குட் நைட் மணிகண்டன்!..

நடிகர்கள் கொஞ்சம் பிரபலமாக துவங்கிய பிறகு அவர்கள் செய்யும் முதல் விஷயம் தங்களது சம்பளத்தை உயர்த்துவதுதான். இது பெரிய நடிகர்களில் துவங்கி சின்ன நடிகர்கள் வரை தமிழ் சினிமாவில் பரவலாக இருந்து வருகிறது. அந்த வகையில் அறிமுகமாகும் புது நடிகர்கள் ஒரு சில திரைப்படங்களுக்கு பிறகு தங்களது சம்பளத்தை அதிகரித்து விடுகின்றனர்.

நடிகர் கவின் கூட அப்படியாக தனது சம்பளத்தை அதிகரித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் கவின் அதன் பிறகு வெகு நாட்களாக தமிழ் சினிமாவில் நடிகராவதற்கு முயற்சித்து வந்தார். அந்த வகையில் அவருக்கு லிஃப்ட் என்னும் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அது ஒரு ஹாரர் திரைப்படம் என்றாலும் அதற்கு மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அடுத்து கவின் நடித்த திரைப்படம் டாடா. இந்த திரைப்படம் நல்ல வெற்றியை கண்டது. டாடா திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து கவின் தனது சம்பளத்தை 4 கோடியாக உயர்த்தியுள்ளார்.

அதே போல நடிகர் மணிகண்டனும் ஜெய் பீம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதற்கு பிறகு குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய இரண்டு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களுமே நல்ல வெற்றியை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து மணிகண்டனுக்கு வாய்ப்புகள் அதிகரிக்க துவங்கியுள்ளன. எனவே அவரும் அவரது சம்பளத்தை 2 கோடிக்கு உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக மணிக்கண்டன் இருக்கிறார்.

டேய் கம்முனாட்டி உனக்கு இருக்குடா!.. நடிகர் மணிகண்டன் காதல் வாழ்க்கையில் விளையாடிய நண்பர் யார் தெரியுமா?

Jai bhim Manikandan : ஜெய் பீம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன். அதற்கு முன்பே காதலும் கடந்து போகும், காலா மாதிரியான சில திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும் கூட அவருக்கு ஒரு அடையாளமாக அமைந்த திரைப்படம் ஜெய் பீம்.

ஏனெனில் ஜெய் பீம் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்த குட் நைட் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்தனைக்கும் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சிகள் கூட இல்லாத படம்தான் என்றாலும் கூட இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

actor-manikandan

அதனை தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மணிகண்டன். தற்சமயம் இவர் நடித்திருக்கும் லவ்வர் என்கிற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் அவர் பல யூ ட்யூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.

அதில் அவர் கூறும் பொழுது பள்ளி பருவத்தில் அவருக்கு இருந்த காதல் குறித்து கேட்கப்பட்டது. அப்பொழுது கூறியவர் என்னுடன் ஒரு நண்பன் இருந்தான் அவன் மௌனம் பேசியதே போன்ற திரைப்படங்களை பார்த்துவிட்டு காதல் செய்யாமல் இருப்பது தான் பெரிய கெத்து என்று பேசி வந்தான்.

நானும் அதெல்லாம் உண்மை என்று நம்பி பள்ளி காலத்தில் துவங்கி கல்லூரி வரை காதலிக்காமலேயே இருந்து விட்டேன். அந்த கம்முனாட்டி மட்டும் என் கண்ணில் பட்டான் என்றால் அவனுக்கு இருக்கு என்று கூறிய மணிகண்டன் அந்த நண்பனின் பெயர் பிரவீன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் இப்படியான ஒரு நண்பன் எல்லாருக்குமே உண்டு என்று இதற்கு நெட்டிசன்கள் பதில் அளித்து வருகின்றனர்.