Tag Archives: thullatha manamum thullum

விஜய் பட இயக்குனர்னு சொன்னாலே கடுப்பா வரும்… 2 கே கிட்ஸ்தான் என் அடையாளத்தை மாத்துனாங்க… அவங்களைதான் பிடிக்கும்…

Actor vijay: ஆரம்பத்தில் நடிகர் விஜய் சினிமாவிற்கு அறிமுகமானப்போது பெரும்பாலானவர்களுக்கு விஜய்யை அவ்வளவாக பிடிக்கவில்லை. ஏனெனில் விஜய் தொடர்ந்து தனது திரைப்படங்களில் ஒரு ப்ளேபாய் மாதிரியான கதாபாத்திரத்திலேயே நடித்து வந்தார்.

அதனை தொடர்ந்து அவருக்கான வாய்ப்புகளும் குறைய துவங்கின. முக்கியமாக நடிகை சங்கவியுடன் அவர் நடிக்கும் கவர்ச்சி காட்சிகள் எல்லாம் பலருக்கும் முகம் சுளிக்கும் விஷயமாக இருந்தன. இந்த நிலையில் விஜய்யின் சினிமா வாழ்க்கையை புரட்டி போடும் ஒரு விஷயமாக பூவே உனக்காக திரைப்படம் அமைந்தது.

vijay

ப்ளே பாயாக விஜய்யை ஏற்றுக்கொள்ளாத மக்கள் பிறகு ஒரு காதல் கதாநாயகனாக விஜய்யை கொண்டாட துவங்கினர். பூவே உனக்காக திரைப்படம் பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அடித்தது. அதற்கு பிறகு விஜய்க்கு பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் என்றால் அது துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படமாகும்.

வாழ்க்கையை மாற்றி அமைத்த படம்:

சார்லி சாப்ளின் நடிப்பில் உருவான சிட்டி லைட்ஸ் என்னும் திரைப்படத்தின் கதையை கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். அந்த திரைப்படம் விஜய்க்கு பெரும் வெற்றியை கொடுத்தது என்பதையும் தாண்டி அந்த படத்தின் இயக்குனர் எழிலுக்கு பெரும் வெற்றியாக அந்த படம் அமைந்தது,

இதுக்குறித்து இயக்குனர் எழில் ஒரு பேட்டியில் கூறும்போது துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்திற்கு பிறகு அதுவே என்னுடைய அடையாளமானது. அதற்கு பிறகு என்னை யார் பார்த்தாலும் சார் துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் இயக்குனர்தானே நீங்கள் என்றே கேட்டு வந்தனர்.

அதற்கு பிறகு நான் நிறைய வெற்றி படங்களை கொடுத்தப்பிறகு கூட பார்ப்பவர்கள் துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் இயக்குனர் என்றுதான் கூறுகின்றனர். இதனால் ஒரு சமயத்தில் எனக்கே கோபமாக வர துவங்கிவிட்டது. ஆனால் இப்போது உள்ள 2 கே கிட்ஸை பொறுத்தவரை அவர்கள் என்னை அப்படி அழைப்பதில்லை.

அதுவரை சந்தோஷம் என தனது மனநிலையை பகிர்ந்துள்ளார் இயக்குனர் எழில்.

பெரிய ஹீரோ கிடைச்சிட்டான்னு அவன சாவடிக்க கூடாது!.. லோகேஷ் கனகராஜைதான் சொல்றாரு போல!.. விஜய் பட இயக்குனர் ஓப்பன் டாக்!.

Lokesh kanagaraj:விஜய்யின் சினிமா வரலாற்றை எடுத்துக் கொண்டால் அதில் அவருக்கு மைல் கல்லாக சில திரைப்படங்கள் அமைந்திருக்கும் உதாரணத்திற்கு விஜய்யின் வெற்றியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு எப்படி பெரும் பங்கு இருக்கிறதோ அதேபோல இயக்குனர் எழிலுக்கும் பெரிய பங்கு இருக்கிறது.

இயக்குனர் எழில் இயக்கிய துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் விஜய்யின் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான ஒரு திரைப்படமாகும் அந்த திரைப்படம் தந்த வெற்றி எவ்வளவு பெரிது என்றால் இப்போது வரை அந்த திரைப்படத்தை தொலைக்காட்சியில் போட்டால் அப்போது இருந்த சினிமா ரசிகர்கள் அதை பார்ப்பார்கள்.

லோகேஷ் கனகராஜ் திரைப்படமாகவே இருந்தாலும் ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் அந்த திரைப்படத்தை பார்க்க முடியாது. ஆனால் விஜய் முன்பு கொடுத்த நிறைய வெற்றி படங்கள் பல தடவை பார்க்கும் வண்ணம் அமைந்த திரைப்படங்கள் ஆகும்.

இயக்குனர் எழில் விஜய்யுடன் பணிபுரிந்த நிகழ்வுகளை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டிருந்த பொழுது அந்த படத்தில் காமெடி, சென்டிமென்ட், காதல் என்று பல தரப்பட்ட விஷயங்கள் இருந்ததை குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது அவர் கூறும் பொழுது ஒரு திரைப்படம் என்பது வெறும் கதாநாயகனை மட்டும் வைத்து மட்டும் உருவாவது கிடையாது. அதில் உள்ள அனைவருமே அந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்கின்றனர். துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தைப் பொறுத்தவரை படம் முழுக்க நான் விஜய்யை காட்டிக் கொண்டிருக்வில்லை.

lokesh-kanagaraj-pic

விஜய் இல்லாமல் மற்ற நடிகர்கள் அவர்களது வாழ்க்கை முறை என்று காமெடி நடிகர்களுக்கு கூட தனியாக காட்சிகள் வைத்திருப்பேன். ஒரு பெரிய ஹீரோ கிடைத்துவிட்டார் என்பதற்காக படம் முழுக்க அவரை வைத்து சாவடிக்க கூடாது தேவைப்படும் இடத்தில் மட்டும்தான் பெரிய கதாநாயகனாக இருந்தாலும் இருக்க வேண்டும் என்று எழில் கூறியிருந்தார்.

தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் படம் முழுக்க அந்த கதாநாயகன் இருப்பது போல் தான் இருக்கின்றன எனவே அதை கூறும் வகையில் தான் இப்படி பேசி இருக்கிறார் எழில் என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சுக்கள் இருக்கின்றன.

ஒரு கேரக்டர கண்ணுலையே காட்டாமல் கெத்து ஏத்திட்டியேப்பா!.. அஜித் பட இயக்குனரை பார்த்து ஆடிப்போன ஆர்.பி சௌத்ரி..

Director ezhil: தமிழ் சினிமா இயக்குனர்களில் 90 காலங்களில் நிறைய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்கள் உண்டு. அப்படியான இயக்குனர்கள் பலரையும் இன்றைய தலைமுறையினருக்கு தெரிவதற்கான வாய்ப்பு என்பது மிக மிக குறைவு. அப்படியிருக்கும்போது பழைய படங்கள் பல ஹிட் கொடுத்து இப்போதைய தலைமுறையினரிடமும் பிரபலமாக இருப்பவர் இயக்குனர் எழில்.

விஜய்யை வைத்து துள்ளாத மனமும் துள்ளும், அஜித் நடிப்பில் பூவெல்லாம் உன் வாசம் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் எழில். இப்போதைய தலைமுறையினருக்கும் அவரை தெரிய காரணமாக இருப்பது அவரது சினிமா பயணம்தான். இப்போதும் அவர் ஹிட் கொடுக்கும் திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

பெரும்பாலும் இப்போது அவர் இயக்கும திரைப்படங்கள் காமெடி திரைப்படங்களாகவே இருக்கின்றன. அதில் தேசிங்கு ராஜா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற திரைப்படங்கள் பிரபலமானவை. தற்சமயம் தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகம் வேறு எடுத்துள்ளார் எழில்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவரிடம் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தின் அனுபவம் குறித்து பேசப்பட்டது. அதில் பதிலளித்த எழில் கூறும்போது துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் ஒரு அம்மா கதாபாத்திரத்தை வைத்திருப்பேன். அந்த கதாபாத்திரம் படத்தில் எங்குமே வராது.

ஆனால் மொத்த படத்திலேயும் மிக முக்கியமான கதாபாத்திரம் அது. இந்த நிலையில் அந்த படத்தை திரையிடுவதற்கு முன்பு பார்த்த தயாரிப்பாளர் ஆர்.பி சௌத்ரி அந்த படத்தை பார்த்தார். அவருக்கு ஒரே அதிர்ச்சியாகி விட்டது. என்னதுயா அந்த அம்மா கதாபாத்திரத்தை காட்டவே இல்லை. அட்லீஸ்ட் ஒரு போட்டோவாவது காட்டலாம் இல்லையா என கேட்கவும் இல்லை சார் கதைக்கு அது தேவைப்படவில்லை என கூறியிருக்கிறார் எழில்.

அதே போல படம் வெளியான பிறகு மக்களுக்கும் கூட விஜய்யின் தாயை காட்டவே இல்லையே என்கிற கேள்வி வரவில்லை. ஆனால் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக அந்த தாய் கதாபாத்திரம் இருந்தது.

அந்த விஷயத்துலயே ஏழு விதம் இருக்கு சார்!.. விஜய் படத்தில் வந்து காணாமல் போன நடிகர்!.. அவ்வளவு திறமையா இவருக்கு!..

Thalapathy vijay: தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் ஆவார். இப்போது அவர் பெரும் உச்சத்தை தொட்டிருந்தாலும் கூட ஆரம்பத்தில் இவருக்கு தமிழில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

முதல் படத்தில் நடித்தப்போது உருவம் ரீதியாக அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானார் விஜய். அவர் பார்ப்பதற்கு ஒரு கதாநாயகன் போலவே இல்லை என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்தன. இந்த நிலையில்தான் அவருக்கு விஜயகாந்த் உதவினார்.

செந்தூர பாண்டி திரைப்படத்தில் விஜயகாந்திற்கு தம்பியாக நடித்தார் விஜய். ஆனால் அதற்கு பிறகும் விஜய்க்கு பெரிதாக வரவேற்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் விஜய்யின் வாழ்க்கையை காதல் திரைப்படங்கள் திருப்பி போட்டன.

பூவே உனக்காக திரைப்படத்தில் காதல் நாயகனாக நடிக்க துவங்கியதும் அவருக்கான வரவேற்பு அதிகரித்தது. அதனை தொடர்ந்து அவருக்கு பெரும் வெற்றியை கொடுத்த அடுத்த படம் துள்ளாத மனமும் துள்ளும். இப்போதும் கூட அந்த படத்தை தொலைக்காட்சியில் போடும்போது பார்ப்பதற்கு மக்கள் ஆவல் காட்டுகின்றனர்.

காமெடி, செண்டிமெண்ட், காதல் என அனைத்தையும் மிக சரியாக அந்த படத்தில் பொறுத்தி இருப்பார் இயக்குனர் எழில். அதில் அதிகமாக மக்கள் மத்தியில் பிரபலமானது ட்ரவுசர் பாண்டி காமெடிகள். ட்ரவுசர் பாண்டி என்னும் ஒரு கதாபாத்திரம் அந்த ஏரியாவில் செய்யும் அட்ராசிட்டிகளே படத்தில் காமெடியாக இருக்கும்.

பாரி வெங்கட் என்னும் நடிகர்தான் அந்த படத்தில் ட்ரவுசர் பாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் அவர் ஒருவருக்கு வழி சொல்லும் காட்சி மிக பிரபலமானது. அந்த காட்சி குறித்து இயக்குனர் எழில் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

அதில் அவர் கூறும்போது வழி சொல்லும் அந்த காட்சி தொடர்பாக நாங்கள் பாரி வெங்கட்டிடம் கூறியப்போது அவர் எங்களிடம் வட சென்னை மக்கள் வழி சொல்லுவதிலேயே 7 விதம் இருக்கு சார் எனக்கூறி அந்த ஏழு விதங்களிலும் அதை நடித்தும் காட்டியுள்ளார். அதில் எழிலுக்கு ஒரு வகை பிடித்துப்போகவே அது படத்தில் வைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த காட்சிக்கான மொத்த பெருமையும் நடிகர் பாரி வெங்கட்டிற்குதான் செல்ல வேண்டும் என கூறியிருந்தார்.

அவ்வளவு திறமைகள் இருந்தும் அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்த மாதிரி கதைக்கு க்ளாமர் கதாநாயகியை கேக்குறியே!.. தயாரிப்பாளர் கூறியும் கேட்காமல் இயக்குனர் வைத்த கதாநாயகி!..

தமிழ் சினிமாவில் 1990 கால கட்டங்களில் கதாநாயகிகள் இரண்டு வகையாக பிரித்து வைத்திருந்தனர். குடும்ப பாணியான திரைப்படங்களில் நடிக்கும் கதாநாயகிகள் கவர்ச்சி படங்களில் நடிக்கும் கதாநாயகிகள் என இரண்டாக பிரித்து வைத்திருந்தனர்.

இந்த கவர்ச்சியாக நடிக்கும் கதாநாயகிகளை பெரும்பாலும் குடும்ப பாணியிலான திரைப்படங்களில் நடிக்க வைக்க மாட்டார்கள். அதேபோல குடும்ப பாணியில் நடிக்கும் நடிகைகள் யாரும் கவர்ச்சியான திரைப்படங்களில் நடிக்க மாட்டார்கள்.

உதாரணத்திற்கு சினேகா, தேவயானி, நதியா மாதிரியான நடிகைகள் தமிழ் சினிமாவில் எப்போதுமே புடவை கட்டி வரும் கதாநாயகியாகதான் நடித்திருப்பார்கள். ஒருவேளை மாடர்ன் உடை அணிவதாக இருந்தாலும் கூட அந்த உடையும் நாகரீகமாக இருக்கும் பட்சத்தில் தான் அவர்கள் அணிவார்கள்.

அதேபோல கவர்ச்சி கதாநாயகிகளாக சிம்ரன், குஷ்பு, ரோஜா மாதிரியான நடிகைகள் பார்க்கப்பட்டார்கள். அதனால் அதிகபட்சமாக அவர்களுக்கு கவர்ச்சியான கதைகளே திரைப்படமாக அமைந்தன. இருந்தாலும் இதற்கு விதிவிலக்காக சில இயக்குனர்கள் அனைத்து விதமான கதைகளையும் எந்த வகையான கதாநாயகியாக இருந்தாலும் அவர்களை வைத்து எடுத்தனர்.

இயக்குனர் எழில் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தின் கதையை எழுதிய பொழுது அதற்கு தேவையானி மாதிரியான ஒரு நடிகையை தான் கதாநாயகியாக வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார் தயாரிப்பாளர்.

ஏனெனில் அந்த கதைப்படி அப்படிப்பட்ட ஒரு குடும்ப பாணியான பெண்ணுக்குதான் அந்த கதாபாத்திரம் சரியாக இருக்கும் என்று நினைத்தார் தயாரிப்பாளர். ஆனால் இயக்குனர் எழிலை பொருத்தவரை சிம்ரன் தான் அந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.

இதை கேட்ட தயாரிப்பாளர் இந்த கதாபாத்திரத்திற்கு சிம்ரன் சரியாக வருவாரா அப்படியே அவர் சரியாக நடித்தாலும் இதுவரை அவரை கவர்ச்சியாக பார்த்த மக்கள் இப்படி புடவை கட்டி சிம்ரனை ஏற்றுக் கொள்வார்களா என்று கேட்டார்.

அதற்கு பதில் அளித்த எழில் நாம் காட்டும் விதத்தில்தான் இருக்கிறது கண்டிப்பாக சிம்ரன் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று கூறியிருக்கிறார். அதேபோலவே சிம்ரனிற்கு ஒரு சிறப்பான திரைப்படமாக துள்ளாத மனமும் துள்ளும் அமைந்தது. அதற்கு பிறகு குடும்ப பாணியிலான  சில திரைப்படங்களும் அவருக்கு கிடைத்தன.

சூப்பர் குட் ஃபிலிம்ஸ்க்கே நோ சொன்ன முரளி… அருமையான கதையை விட்டுட்டிங்களே சார்!.

Super Good Films : 1990களில் பிரபலமாக இருந்த தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம் சூப்பர் குட் ஃபிலிம்ஸ். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தை பொருத்தவரை அதன் உரிமையாளரான ஆர்.பி சௌத்ரிதான் படங்களுக்கான கதைகளை தேர்ந்தெடுப்பார்

ஒரு திரைப்படத்திற்கான கதையையும் அந்த கதைக்கான கதாநாயகனையும் அவரே முடிவு செய்வார். அப்படி அவர் முடிவு செய்யும் ஒவ்வொரு திரைப்படமும் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றியை கண்டிருக்கின்றன.

இந்த நிலையில்தான் இயக்குனர் எழில் ஒரு கதையை எழுதி வைத்துக்கொண்டு அதற்கு தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது இருந்த டாப் நடிகர்கள் வரை குறைந்த வரவேற்பு பெற்ற நடிகர்கள் வரை யாருமே அந்த கதையில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் அந்த கதை ஆர்.பி சௌத்ரியிடம் வந்தது. எழில் அந்த கதையை கொண்டு செல்வதற்கு முன்பு ஒரு பெரிய கதாநாயகனுக்கு ஏற்றார் போல சில சண்டை காட்சிகள் எல்லாம் வைத்து அந்த கதையை மாற்றி அமைத்து இருந்தார். அந்த கதையை ஆர்.பி சௌத்ரி கேட்ட பொழுது அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.

இந்த திரைப்படத்தில் முரளியை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்பது ஆர்.பி சௌத்ரியின் எண்ணமாக இருந்தது. எனவே எழிலிடம் கதையை முதலில் முரளியிடம் கூறுங்கள் அவர் அதற்கு ஒப்புக் கொண்டால் அடுத்து நாம் படபிடிப்பை துவங்கலாம் என்று கூறினார்.

உடனே எழிலும் அந்த கதையை முரளியிடம் கூறினார் ஆனால் முரளிக்கும் அந்த கதை பிடிக்கவில்லை. எனவே அவர் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இது ஆர்.பி சௌத்ரிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி விட்டது.

ஏனெனில் பொதுவாக ஆர்.பி சௌத்ரி ஒரு கதையை பரிந்துரைக்கிறார் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு நடிகர்கள் அதில் நடிக்க ஒப்புக்கொள்வார்கள். ஆனால் முரளி அப்படி செய்யாமல் விட்டது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு அந்த கதையை விஜய்யிடம் சென்று கூறினார்.

விஜய் உடனே அந்த கதையில்  நடிக்க ஒப்புக்கொள்ள துள்ளாத மனமும் துள்ளும் என்கிற அந்த திரைப்படம் தயாரானது. ஒருவேளை அந்த திரைப்படத்தில் முரளி நடித்திருந்தால் அவருக்கு அது பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கும்.

வடிவேலு விரும்பி நடிக்க ஆசைப்பட்ட படம்… இறுதியில் விஜய் நடித்து ஹிட்டு!.. அப்பவே வைகை புயல் தவறவிட்ட வாய்ப்பு!..

Actor Vijay and Vadivelu: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு திரைப்படத்தின் வாய்ப்பும் ஒரு நடிகரின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கின்றன. உதாரணத்திற்கு நடிகர் சூரியை பொறுத்தவரை வெண்ணிலா கபடி குழு, விடுதலை ஆகிய இரண்டு திரைப்படங்களும் அவரது சினிமா வாழ்க்கையையே மாற்றி அமைத்த திரைப்படங்களாகும்.

இதே மாதிரி வடிவேலுவிற்கும் ஒரு சிறப்பான கதையில் கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் கூட அவரால் நடிக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. இயக்குனர் எழில் அப்போது திரைத்துறையில் ஒரு திரைக்கதையை வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடி கொண்டிருந்தார்.

சார்லி சாப்ளின் நடிப்பில் வெளிவந்த சிட்டிலைட் என்கிற திரைப்படத்தின் கதையை கொண்டு எழில் ஒரு திரைக்கதையை அமைத்திருந்தார். ஆனால் பெரும்பாலான பிரபலங்கள் அப்போது சிட்டிலைட் திரைப்படத்தை பார்த்திருந்தனர். எனவே இந்த கதை சிட்டிலைட் படத்தின் கதைதான் என்பது வெட்ட வெளிச்சமாக அவர்களுக்கு தெரிந்தது.

ஆனால் தமிழில் அந்த மாதிரியான கதை எதுவும் படமாக வரவில்லை என்பதால் கண்டிப்பாக அந்த கதைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது எழிலின் மனநிலையாக இருந்தது. இந்த நிலையில் பல கதாநாயகர்களிடம் இந்த கதையை கூறினார்.

முதலில் இந்த கதையை நடிகர் பாண்டியராஜனிடம் கூறினார் எழில். ஏனெனில் முதலில் இந்த கதையை காமெடி படமாக எடுக்கவே அவர் முடிவு செய்திருந்தார். பாண்டியராஜனுக்கும் இந்த கதை பிடித்திருந்தது. இதில் கதாநாயகியாக குஷ்பு நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்த பாண்டியராஜன் அந்த கதையை குஷ்புவிடம் கூறுமாறு கூறியிருக்கிறார்.

குஷ்புவிற்கும் இந்த கதை பிடித்துப்போக பல தயாரிப்பாளர்களை தேடி போய் எந்த தயாரிப்பாளரும் கிடைக்காமல் சோர்ந்து போய்விட்டார் எழில். அதன் பிறகு வடிவேலுவிடம் இதே கதையில் நடிப்பதற்கு கேட்டப்பொழுது வடிவேலுவிற்கும் இந்த கதை பிடித்திருந்தது.

ஆனால் வடிவேலுவை கதாநாயகனாக போடுவதற்கு எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை. இதனால் எழில் விரக்தியில் இருக்கும்போது அவரது நண்பர்கள் எதற்காக இதை ஒரு காமெடி படமாக எடுக்க நினைக்கிறாய். பெரிய கதாநாயகர்களுக்கு ஏற்றாற் போல ஒரு கமர்ஷியல் கதையாக இதை எழுது என அறிவுரை வழங்கியுள்ளனர்.

அதன்படி மீண்டும் திரைக்கதையை மாற்றியமைத்தார் எழில். இந்த முறை கதை சூப்பர் குட் பிலிம்ஸ் உரிமையாளர் ஆர்.பி சௌத்ரிக்கே பிடித்துவிட்டது. அதனை தொடர்ந்து கதையை விஜய்க்கு கூற விஜய்க்கும் படம் பிடித்துவிட துள்ளாத மனமும் துள்ளும் என்கிற பெயரில் அந்த படம் வெளியானது.

விஜய்க்கு அந்த படம் பெரும் வெற்றியை கொடுத்தது. தயாரிப்பாளர் ஆர்.பி சௌத்ரிக்கும்தான், அதனை தொடர்ந்து அப்போது படத்தை நிராகரித்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் அது ஆச்சரியம் தரும் நிகழ்வாக இருந்தது. ஒருவேளை இந்த படத்தில் வடிவேலு நடித்திருந்தால் அப்போதே கதாநாயகன் ஆகியிருப்பார் வடிவேலு.

ஒரு நாள் கழிச்சிதான் சொல்ல முடியும்? பிரபல தயாரிப்பாளரை வீட்டு வாசலுக்கு வரவழைத்த விஜய்!

இப்போது பெரும் கமர்ஷியல் நாயகனாக இருந்தாலும் ஆரம்பக்கட்டத்தில் நடிகர் விஜய் ஒரு காதல் நாயகனாக மிகவும் பிரபலமானவர். அந்த காலக்கட்டங்களில் பாலிவுட்டில் துவங்கி கோலிவுட் வரை காதல் கதைகளுக்கு அதிக வரவேற்பு இருந்தது.

1990கள் காலக்கட்டத்தில் விஜய் தொடர்ந்து காதல் படங்களாக நடித்து வந்தார் லவ் டுடே, நிலாவே வா, நினைத்தேன் வந்தாய் போன்ற திரைப்படங்கள் அவரது நடிப்பில் வந்து ஹிட் அடித்துக்கொண்டிருந்தன. எனவே அதிகப்பட்சம் இயக்குனர்கள் அனைவரும் அவருக்கு காதல் கதைகளே எழுதி வந்தனர்.

அப்போது இயக்குனர் எழிலும் விஜய்க்காக ஒரு காதல் கதையை எழுதியிருந்தார். அதை அவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான ஆர்.பி செளத்ரியிடம் கூறினார். அதை கேட்டதுமே ஆர்.பி செளத்ரிக்கு பிடித்துவிட்டது. இந்த கதையை உடனே விஜய்யிடம் கூறுங்கள் என ஆர்.பி செளத்ரி கூறினார்.

பிறகு விஜய்யை நேரில் சந்தித்த எழில் படத்தின் கதையை கூறினார். கதையை முழுமையாக கேட்ட விஜய் “எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். யோசித்து சொல்கிறேன்” என கூறிவிட்டார். இந்த நிலையில் மறு நாள் காலையில் எழிலை அழைத்த ஆர்.பி செளத்ரி “விஜய்யிடம் கதையை கூறினீர்களா?” என கேட்டுள்ளார்.

கூறினேன் சார் யோசித்து சொல்றேன்னு சொல்லியிருக்கிறார்” என எழில் கூறியுள்ளார். உடனே எழிலை அழைத்துக்கொண்டு விஜய்யின் வீட்டிற்கே சென்றுவிட்டார் ஆர்.பி செளத்ரி. இது நல்ல கதையாச்சே எதற்கு விஜய் யோசிக்கிறார் என ஆர்.பி செளத்ரிக்கு வியப்பு. ஆனால் அங்கு சென்றதுமே அவர்களை பார்த்த விஜய் படத்துக்கு நான் தயார் சார். எப்ப ஷூட்டிங் போகலாம் என கேட்டுள்ளார்.

அந்த கதைதான் 1999 இல் துள்ளாத மனமும் துள்ளும் என்கிற பெயரில் வெளியானது.