Connect with us

என்னால சுத்தமா முடியல… மனோபாலா உடல் பிரச்சனை குறித்து கூறிய உதவியாளர்!..

News

என்னால சுத்தமா முடியல… மனோபாலா உடல் பிரச்சனை குறித்து கூறிய உதவியாளர்!..

Social Media Bar

தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நகைச்சுவை கலைஞர்களில் முக்கியமானவர் நடிகர் மனோபாலா. எந்த ஒரு நடிகரும் தமிழ் சினிமாவில் தனக்கென தனியான ஒரு நகைச்சுவை திறனை கொண்டு அதை வைத்து காமெடி செய்யும் போதுதான் சினிமாவில் பல காலங்கள் இருக்க முடிகிறது.

அப்படி தமிழ் சினிமாவில் பல காலமாக தனது தனிப்பட்ட நகைச்சுவை திறன் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்தவர் மனோபாலா. ஒரு இயக்குனராகவும் மனோபாலா சில ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென மனோபாலாவின் இறப்பு பலருக்கும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்திய விஷயமாக உள்ளது. நல்ல நலமுடன் இருந்த மனோபாலாவுக்கு திடீரென ஏன் இப்படி ஒரு இறப்பு நிகழ்ந்தது என அவரது உதவியாளர்கள் ஒரு பேட்டியில் விளக்கியுள்ளனர்.

பொள்ளாச்சிக்கு அருகே ஒரு படப்பிடிப்பிற்காக சென்றிருந்தார் மனோபாலா. அந்த சமயத்தில் அவருக்கு திடீரென அடிவயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது சாதாரணமான வலியாகத்தான் இருக்கும் என்று நினைத்து அங்கே இருக்கும் சின்ன மருத்துவமனையில் அவரை சேர்த்துள்ளனர். அங்கே இருந்த மருத்துவர் அவருக்கு சாதாரண வயிற்று வலிதான், உணவு ஒத்துக்கொள்ளாததால் இந்த வலி ஏற்பட்டுள்ளது எனக் கூறி ட்ரிப்ஸ் ஏற்றி உள்ளனர்.

அதன் பிறகு அங்கு வந்த உதவியாளர்கள் அவரைப் பெரிய மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். அங்கே அவருக்கு 6 நாட்கள் சிகிச்சை நடந்தது அவர்களும் அவருக்கு பெரிதாக எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியிருக்கின்றனர். பிறகு உடல் நலமாகி மனோபாலா சென்னைக்கு தனது வீட்டிற்கு வந்துள்ளார் வந்த சில நாட்களில் உடலில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு அவரது இறப்பு நடந்துள்ளது.

இவை யாவும் கடந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்த காரணத்தினால் மக்களுக்கு பெரிதாக இதைப் பற்றி தெரியாமல் இருந்துள்ளது எனவே இந்த இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாக அமைந்துவிட்டது.

To Top