News
அரண்மனை நான்கில் இருந்து விலகிய விஜய் சேதுபதி! – இதுதான் காரணமா!
தமிழில் பேய் படங்களை எடுத்துக்கொண்டே இருக்கும் இரண்டு முக்கியமான இயக்குனர்களில் ஒன்று சுந்தர் சி மற்றொன்று லாரன்ஸ். இவர்கள் இருவருமே எனக்கும் அவருக்கும்தான் போட்டியே என்கிற ரீதியில் போட்டி போட்டு வந்தனர். லாரன்ஸ் தற்சமயம் இந்த பேய் படங்கள் எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளார்.

ஆனால் சுந்தர் சி நிறுத்துவதாக இல்லை. அரண்மனை என அவர் துவங்கிய திரைப்படம் ஒவ்வொரு பாகமாக வெளிவந்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பாகத்திலும் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மாறுகிறார்களே தவிர கதையில் எந்த மாற்றத்தையும் பார்க்க முடிவதில்லை.
இந்த நிலையில் தற்சமயம் அரண்மனை திரைப்படத்தின் நான்காம் பாகத்திற்கான தயாரிப்பு வேலைகள் துவங்கியுள்ளன. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. அது இல்லாமல் நடிகர் சந்தானமும் இதில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
ஆனால் திடீரென தற்சமயம் விஜய் சேதுபதி இந்த படத்தை விட்டு விலகியுள்ளார். என்ன காரணம் என தெரியவில்லை. விஜய் சேதுபதி கேட்ட சம்பளத்தை சுந்தர் சியால் கொடுக்க முடியவில்லை என சில பேச்சுக்கள் உலா வருகின்றன.
இந்த நிலையில் அந்த முக்கிய கதாபாத்திரத்தில் நானே நடிக்கிறேன் என களம் இறங்கியிருக்கிறார் சுந்தர் சி. இதற்கு முன்னர் வந்த அரண்மனை திரைப்படங்களிலும் கூட சுந்தர் சி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
