Connect with us

சினிமாவிற்குள் களம் இறங்கும் தளபதி மகன்!.. லைக்கா வெளியிட்ட மாஸ் அப்டேட்..

News

சினிமாவிற்குள் களம் இறங்கும் தளபதி மகன்!.. லைக்கா வெளியிட்ட மாஸ் அப்டேட்..

Social Media Bar

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. தற்சமயம் நடித்த வாரிசு படம் கூட அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதனை தொடர்ந்து அடுத்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குவதால் இதற்கு அதிக வரவேற்பு நிலவி வருகிறது. விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கும் சினிமாவின் மீது முதலில் இருந்தே விருப்பம் இருந்து வந்தது.

வேட்டைக்காரன் படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்ட பாடலுக்கு கூட விஜய்யுடன் அவர் சேர்ந்து நடித்திருப்பார். ஆனால் அதற்கு பிறகு விஜய் அவரது மகனை சினிமாவில் பெரிதாக காட்டவில்லை. கொரோனா காலக்கட்டத்தில் சஞ்சய் வெளிநாட்டில் படித்து கொண்டிருந்தார்.

கல்லூரியில் படிக்கும் காலக்கட்டம் முதலே அவருக்கு இயக்குனராகவே ஆசை என கூறப்பட்டது. இந்த நிலையில் தற்சமயம் மிரட்டலான அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி லைகா நிறுவனத்தில் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்குனராக களம் இறங்கியுள்ளார்.

கூடிய விரைவில் இவர் இயக்கும் படம் குறித்த தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ இந்த செய்தி கண்டிப்பாக தளபதி ரசிகர்களுக்கு பெரும் ட்ரிட்டாகதான் இருக்கும்.

To Top