Gossips
எங்கயும் போக முடியாது.. மதுபான நடிகையை வேட்டையாடிய பந்து நடிகர்.. கொடுமையே!..
தமிழ் சினிமாவிற்கும் கிசுகிசுவிற்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு உண்டு என்று கூறலாம். சினிமா என்பது இருக்கும் வரை கிசுகிசுக்களும் இருந்துக்கொண்டுதான் இருக்கும்.
இந்த நிலையில் சமீபத்தில் மதுபான நடிகைக்கும் பந்து நடிகருக்கும் இடையே ஏற்பட்ட உறவுதான் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. பொதுவாகவே பெண் நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வரும்பொழுது நிறைய விஷயங்களுக்கு காம்ப்ரமைஸ் செய்து கொண்டு போக வேண்டி இருக்கிறது.
சினிமாவில் கிசு கிசு:
சில பெரும் நடிகர்கள் அவர்களிடம் தவறாக நடந்து கொண்டாலும் கூட அதனை வெளியில் சொன்னால் வாய்ப்புகள் கிடைக்காது என்கிற காரணத்தினால் அதை மூடி மறைக்கின்றனர் நடிகைகள்.

அந்த வகையில் தனது பெயரில் மதுவை வைத்திருக்கும் நடிகை பந்து நடிகருடன் தொடர்பில் இருந்திருக்கிறார். ஒரு காலத்தில் தென்னிந்திய உலகை கலக்கிக் கொண்டிருந்தவர் இந்த நடிகை. தெலுங்கு திரைப்படங்களிலும் தமிழ் திரைப்படங்களிலும் இவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைத்து வந்தன.
இந்த நிலையில் இவருடன் நடித்த பந்து நடிகருடன் இவர் காதலில் இருந்து வந்தார் இவருடைய காதல் விவகாரம் திரைத்துறையில் தெரிய துவங்கிய பிறகு அவருடைய மார்க்கெட் குறைய தொடங்கியது. அதற்கு முக்கிய காரணம் அந்த நடிகைதான் என கூறப்படுகிறது.
கதாநாயகி போட்ட கண்டிஷன்:
ஏனெனில் அவரிடம் ஏதாவது ஒரு தயாரிப்பாளர் தங்களுடைய திரைப்படங்களில் நடிக்க சொன்னால் அந்த திரைப்படத்தில் பந்து நடிகரைதான் நடிக்க வைக்க வேண்டும் என்று இவர் கூறுவாராம். அப்பொழுதுதான் நான் கதாநாயகியாக நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த விதிமுறைகளுக்கு எல்லாம் ஒப்புக்கொள்ள முடியாது என்று இவருக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்து இருக்கின்றனர் தயாரிப்பாளர்கள். பந்து நடிகருடன் இருந்த காதல் பெருக்கத்தால் இவ்வளவையும் செய்த நடிகையை கடைசியில் விட்டு சென்று விட்டார் அந்த அந்த நடிகர்.
இந்த நாள் விரக்தி அடைந்து சுற்றிக் கொண்டிருந்த நடிகை பிறகு அவருடைய நண்பர் ஒருவரையே திருமணம் செய்து கொண்டார் தற்சமயம் இவருக்கு திரும்பவும் வாய்ப்புகள் கிடைக்கிறது என கூறப்படுகிறது.
