Actress
இளசுகளை தவிக்கவிட்ட இவானா!.. ட்ரெண்டாகும் நியு பிக்ஸ்!.
தமிழ் சினிமா நடிகைகளில் ஒரு சில திரைப்படங்களிலேயே ட்ரெண்ட் ஆனவர் நடிகை இவானா. மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவானா நாச்சியார் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

பிறகு ஹீரோ திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் லவ் டுடே திரைப்படம் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு போன வருடம் இவர் நடிப்பில் எல்.ஜி.எம், மதிமாறன் என்கிற இரண்டு திரைப்படங்கள் வந்தன. இரண்டுமே பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

இந்த வருடம் ஜிவி பிரகாஷ் நடித்த கள்வன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிகமாக ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

