Connect with us

என் வாழ்க்கையில் ரொம்ப சீக்கிரமாகவே அதை செஞ்சுட்டேன்!.. இப்ப அனுபவிக்கிறேன்.. கிரணுக்கு நடந்த சோகம்!..

actress-kiran

News

என் வாழ்க்கையில் ரொம்ப சீக்கிரமாகவே அதை செஞ்சுட்டேன்!.. இப்ப அனுபவிக்கிறேன்.. கிரணுக்கு நடந்த சோகம்!..

Social Media Bar

வட இந்தியாவில் இருந்து தமிழ் தேசம் வந்து பிரபலமானவர்தான் நடிகை கிரண் ராத்தோட். சினிமாவில் பெரும் நடிகையாக வேண்டும் என்பதுதான் அவரது பெரும் ஆசையாக இருந்தது. இந்த நிலையில் முதன் முதலாக 2000 ஆம் ஆண்டு வந்த ஹே ராம் திரைப்படத்தின் மூலமாக இவர் அறிமுகமானார்.

அதற்கு பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்த கிரண் தொடர்ந்து தமிழில் மீண்டும் ஜெமினி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஜெமினி திரைப்படம் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது. தொடர்ந்து வில்லன், அன்பே சிவம், திவான் மாதிரியான நடித்து வந்தார் கிரண்.

உடல் எடை பிரச்சனை:

ஆனால் கொஞ்ச காலத்திற்கு பிறகு அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைய துவங்கின. அவரது உடல் எடைதான் அதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அதற்கு பிறகு வாய்ப்புகளை பெறுவதற்காக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் கிரண்.

இந்த புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் அதன் மூலமாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவர் பேசும்போது நான் மிக சீக்கிரமாகவே திருமணம் செய்துக்கொண்டேன். அதுதான் என் வாழ்க்கையிலேயே பெரிய முட்டாள்தனம்.

கிரணுக்கு வந்த பிரச்சனை:

அந்த உறவு வெகு சீக்கிரமே முறிந்துப்போனது. அதனால் நான் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். என்னுடைய கஷ்ட காலமே அங்குதான் துவங்கியது. அதற்கு பிறகு வேலைக்கு சென்றேன். ஆனால் எதுவும் எனக்கு செட் ஆகவில்லை. நான் ஒரு எமோஷனலான முட்டாள் என்கிறார் கிரண்.

அதே போல தற்சமயம் ஃபீல்ட் அவுட்டாக இருக்கும் கிரண் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்கு முயற்சி செய்து வருகிறார்.

To Top