Actress
அசத்தும் அழகில் மிர்னல் தாக்கூர்.. வெளியான பிக்ஸ்..!
சீதாராமம் என்கிற திரைப்படம் மூலமாக தென்னிந்தியா முழுக்க பிரபலம் அடைந்த ஒரு கதாநாயகியாக மாறியவர் மிர்னல் தாக்கூர்.
ஹிந்தியில் பல படங்களில் நடித்து வந்த மிர்னல் தாகூருக்கு தெலுங்கில் வந்த ஜெர்சி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்த பிறகு தென்னிந்தியாவில் நிறைய நல்ல கதைகளை கொண்ட திரைப்படங்கள் வருவதை தெரிந்து கொண்டார் மிர்னல் தாகூர்.
அதுவரை பாலிவுட்டில் அதிக கவர்ச்சியாக நடித்து வந்த அவர் தென்னிந்திய சினிமாவிற்கு வந்து நல்ல கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார்.
அப்படியாக அவர் நடித்த தி ஃபேமிலி ஸ்டார், ஹாய் நானா மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்றன. இப்பொழுது நல்ல மார்க்கெட்டை பெற்ற ஒரு நடிகையாக மிர்னல் தாகூர் இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இப்பொழுது அதிக வைரல் ஆகி வருகின்றன.
