என் பிள்ளைங்க பத்தி அந்த மாதிரி பேசுறாங்க.. மனம் வருந்திய நடிகை ப்ரியாமணி.. இந்த நிலை மாறணும்..!

தமிழில் பருத்திவீரன் திரைப்படம் மூலமாக அதிக பிரபலமாகி அதன் மூலம் தற்சமயம் முக்கிய கதாநாயகியாக இருப்பவர் நடிகை பிரியாமணி.

பிரியாமணி தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தாலும் கூட அவரது சொந்த வாழ்க்கை குறித்து தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.

ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்சமயம் தொடர்ந்து தளபதி 69 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரியாமணி. இந்த நிலையில் தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்து பிரியாமணி கூறும் பொழுது நான் காதல் திருமணம் செய்து கொண்டேன்.

priyamani

Social Media Bar

ப்ரியாமணி ஓப்பன் டாக்:

ஒரு முஸ்லிம் நபரை தான் நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன் அதனால் நானும் முஸ்லிமாக மாறிவிட்டேன் என்று பலரும் கூறுகின்றனர் நான் திருமணம் ஆகும்பொழுதே நான் இஸ்லாத்திற்கு மாற மாட்டேன் என்று கூறி தான் எனது கணவரை திருமணம் செய்தேன்.

அதேபோல நாங்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பயங்கரவாதியாக இருப்பார்கள் என்கின்றனர் எனக்கு அதில் உடன்பாடு இல்லை தயவு செய்து இப்படி எல்லாம் பேசுவதை நிறுத்துகால் என்று கூறியிருக்கிறார் பிரியாமணி.