சிவப்பு உடையில் சிறப்பா இருக்கீங்க? – போட்டோ வெளியிட்ட அஜித் பட நடிகை!

சினிமாவிற்கு வரும் கதாநாயகிகளில் பலர் எந்த ஒரு படத்தில் வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பதை வழக்கமாக கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் அதிலிருந்து முற்றிலுமாக மாறுப்பட்டவர் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்.

Social Media Bar

அவர் நடிக்கும் எந்த ஒரு படத்திலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே அவர் அந்த படத்தில் நடிப்பார். சும்மா கதாநாயகி இருக்க வேண்டும் என்கிற படத்தில் பெரும்பாலும் இவர் நடிப்பதில்லை.

தமிழில் முதன் முதலாக இவன் தந்திரன் படத்தில் அறிமுகமானார். ஆனால் விக்ரம் வேதா திரைப்படம்தான் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

அதற்கு பிறகு தமிழில் அதிக பட வாய்ப்புகளை பெற்றார். ரிச்சி, ஜெர்சி, கே-13, மாறா, சக்ரா, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களில் நடித்தார். அனைத்து படத்திலும் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் அமைந்ததாலே நடித்தார் என கூறப்படுகிறது.

தற்சமயம் இவர் சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.