எனக்கு விஜய்யுடன் நடிக்க விருப்பம் கிடையாது? –  அப்போதே சொன்ன அஜித்!

தற்சமயம் தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கான விஷயம் என்றால் அது விஜய் அஜித் நடிக்கும் வாரிசு துணிவு திரைப்படங்களுக்கு இடையே நடக்கும் போட்டியாகத்தான் இருக்கும்.

ஆனால் ஒரு காலத்தில் விஜய் அஜித் சேர்ந்து நடிப்பார்களா? என்பது ரசிகர்களின் ஆசையாக இருந்தது. இரு பெரும் கதாநாயகர்கள் சேர்ந்து நடிப்பது என்பது தமிழ் சினிமாவில் மிகவும் அரிதாகவே நடக்கும் விஷயமாகும்.

பில்லா படத்திற்கு பிறகு அஜித் கொடுத்த ஒரு பேட்டியில் இதுப்பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறும்போது “விஜய்யுடன் நான் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. ஏனெனில் ஒரு படம் எடுக்கப்படுகிறது எனும்போது அதன் மூலம் பல குடும்பங்களுக்கு வேலை கிடைக்கிறது.

ஆனால் இரு பெரும் கதாநாயகர்கள் ஒரே படத்தில் நடிக்கும்போது அது வேலை ஆட்களை குறைக்கும். இதனால் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறையும் என கூறியுள்ளார்.

மேலும் இரண்டு ஹீரோ உள்ள படங்களிலும் பாடல்கள் வைக்க வேண்டி வரும். அதில் எதாவது ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் ஹிட் அடிக்கும். அந்த பாடல்கள் யாவும் ஒரு கதாநாயகனுடையதாக இருந்தால் அது இன்னொரு நாயகனுக்கு பிரச்சனையில் முடியும்.

எனவே இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பதே தேவையில்லாத விஷயம் என அஜித் கூறியுள்ளார்.

Refresh