News
சினிமால 100 சதவீதம் யோக்கியர்னா அது அவர்தான்!.. விசித்ரா சொன்ன அந்த நபர் யார் தெரியுமா?
சமீப காலமாக தமிழ் சினிமாவிலும் கேரள சினிமாவிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இந்த பாலியல் குற்றங்கள் தொடர்பான விஷயங்கள்தான் இருந்து வருகின்றன. கேரளாவில் பெரும் நடிகர்கள் பாலியல் பிரச்சனைகளில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது முதலே அது குறித்த விஷயங்கள் தென்னிந்தியா முழுவதும் பரபரப்பாகி வருகின்றன.
மேலும் மோகன்லால் மாதிரியான பெரிய நடிகர்கள் இதில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே மற்ற சினிமா நடிகைகளும் அனைத்து சினிமாக்களிலும் இந்த மாதிரி ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
மேலும் பல தமிழ் சினிமா நடிகைகளும் கூட இது குறித்து பேசி வருகின்றனர் இந்த நிலையில் ராதிகா மாதிரியான ஒரு சில நடிகைகள் கேரளாவில் நடிக்க சென்ற பொழுது நடந்த பிரச்சனைகள் குறித்து கூறியிருக்கின்றனர். ஆனால் யாருமே தமிழ் சினிமா பிரபலங்கள் என்ன தவறு செய்தார்கள் என்பதை வெளிப்படுத்த தயாராக இல்லை.
உத்தமமான நடிகர்:
மேலும் பலர் கூறும்பொழுது தமிழ் சினிமாவில் அந்த மாதிரியான பிரச்சினைகளையே அனுபவிக்கவில்லை என்பது போல பேசியிருக்கின்றனர். இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை விசித்ரா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அவர் கூறும் பொழுது தமிழ் சினிமாவிலும் காலம் காலமாக இந்த பாலியல் பிரச்சனைகள் என்பது நடிகைகளுக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் வெளிப்படையாக எந்த நடிகையும் அதை பேசுவது கிடையாது என்ன கேட்டாலும் தமிழ் சினிமாவில் உத்தமமான ஒரு நடிகர் என்று கூறினால் டி ராஜேந்திரன் அவர்களைதான் கூறுவேன்.
ஏனெனில் அவர் தன் வாழ்நாள் முழுக்க எந்த நடிகையுடனும் நெருக்கமாக நடிக்க கூடாது என்பதை பெரிய கொள்கையாக வைத்திருந்தார். அதேபோல படபிடிப்பு நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பெண்களுடன் பேசக்கூட மாட்டார் டி ராஜேந்திரன். அதனால் அவரை பலருக்கும் பிடிக்காது என்றாலும் கூட டி ராஜேந்திரன் மட்டும்தான் சினிமாவில் ஒரு உத்தமமான பிரபலமாக இருந்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார் விசித்ரா.
