News
அரசு பள்ளி மாணவர்களுக்கு எல்லாம் உதவி பண்ணுனவர்!.. நடிகர் சேஷூவின் இழப்பால் வருந்தும் சக நடிகர்கள்!..
விஜய் டிவி லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலமாக பலரும் தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றனர். அப்படியாக சினிமாவில் வாய்ப்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சேஷூ. லொள்ளு சபா நிகழ்ச்சியில் இவர் துணை கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்தார்.
அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. முக்கியமாக நடிகர் சந்தானம் சினிமாவில் வளர துவங்கியவுடன் அவர் தொடர்ந்து லொள்ளு சபாவில் இருந்த நடிகர்களுக்கு தொடர்ந்து அவரது திரைப்படங்களில் வாய்ப்புகளை வழங்கி வந்தார்.

இந்த நிலையில் அந்த வகையில் நடிகர் சேஷூவும் நிறைய திரைப்படங்களில் நடித்தார். ஏ1 திரைப்படத்தில் அவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அது நல்ல வரவேற்பையும் கொடுத்தது. பிறகு வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார் சேஷூ.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடலில் உபாதை ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பால் நேற்று காலமானார். இந்த நிலையில் அவருடன் பணிப்புரிந்த சக நடிகர்கள் கூறும்போது சினிமாவில் குறைவான ஊதியம் பெற்றாலும் கூட அரசு பள்ளி மாணவர்கள், ஏழைகள் என பலருக்கு உதவி செய்யக்கூடியவர் சேஷூ.
அவரின் மரணம் என்பது எங்களுக்கு ஈடு செய்ய முடியாத விஷயமாகும் என கூறியுள்ளனர்.
